தமிழகத்தை பிரிக்கும் கோரிக்கை: ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க ஜெ. முடிவு
சென்னை:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர்ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ராமதாசின் இந்தக் கோரிக்கை மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ள ஜெயலலிதா, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் முதல்வராகும் வகையில் தமிழகத்தின் வட பகுதிமாவட்டங்களைப் பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு:
ராமதாசின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரும் ராமதாசின் பேச்சு குறித்துஎனக்கு மிகக் கடுமையான கருத்துக்கள் உள்ளன. சரியான எண்ணம் கொண்ட மக்கள் அனைவரும் இதைக் கண்டிக்க வேண்டும்என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
காங்கிரஸ்:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ராமதாசின் பேச்சு பிரிவினை சக்திகளுக்கு மிகவும் ஊக்கமாக அமைந்துவிடும்என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நலன் கருதி இதுபோன்ற பேச்சுக்களை ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நல்லகண்னு எதிர்ப்பு:
மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என ராமதாஸ் கோருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜாதிரீதியில் இந்தப் பிரச்சனையை அணுகக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications