உருவானது உலகத் தமிழர் பேரவை
சென்னை:
உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்க்பபட்டுள்ள உலகத் தமிழர் பேரவை இன்றுசென்னையில் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் முயற்சியால் இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பேசிய இலங்கை நீர்பாசனத்துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் விடுதலைப் புலிகளையும் முடிச்சு போட்டு தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கைகழுவக்கூடாது. இது இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை. அவர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள்தார்மீக ஆதரவு தர வேண்டும் என்றார்.
இதில் இலங்கை எம்.பியான விநாயகமூர்த்தி, பழ.நெடுமாறன், கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்தத் துவக்க நிகழ்ச்சிக்கு நேற்று போலீசார் திடீரென தடை விதித்தனர். ஆனால், இந்தத் தடையை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்ததால் இன்று இந்தக் கூட்டம் நடந்தது.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என தனி கீதம், உடை போன்றவையும் இந்த பேரவையால் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும தமிழர்களுக்கு என தனி வங்கி தொடங்கவும் இந்தப் பேரவை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பேரவையின் தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடந்தது. ஆனால்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இந்தக் கூட்டம் நடப்பதாகக் கூறி இதற்கு நேற்று காலை போலீசார் திடீர் தடை விதித்தனர்.இதை எதிர்த்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ், இக் கூட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதே நேரத்தில் புலிகளுக்குஆதரவாகப் பேசக் கூடாது என தடை விதித்தார். இதையடுத்து உலகத் தமிழக் பேரவை துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது.












Click it and Unblock the Notifications