உருவானது உலகத் தமிழர் பேரவை
சென்னை:
உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்க்பபட்டுள்ள உலகத் தமிழர் பேரவை இன்றுசென்னையில் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் முயற்சியால் இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பேசிய இலங்கை நீர்பாசனத்துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் விடுதலைப் புலிகளையும் முடிச்சு போட்டு தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கைகழுவக்கூடாது. இது இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சனை. அவர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள்தார்மீக ஆதரவு தர வேண்டும் என்றார்.
இதில் இலங்கை எம்.பியான விநாயகமூர்த்தி, பழ.நெடுமாறன், கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச்சேர்ந்த தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்தத் துவக்க நிகழ்ச்சிக்கு நேற்று போலீசார் திடீரென தடை விதித்தனர். ஆனால், இந்தத் தடையை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்ததால் இன்று இந்தக் கூட்டம் நடந்தது.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என தனி கீதம், உடை போன்றவையும் இந்த பேரவையால் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும தமிழர்களுக்கு என தனி வங்கி தொடங்கவும் இந்தப் பேரவை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பேரவையின் தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடந்தது. ஆனால்,விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இந்தக் கூட்டம் நடப்பதாகக் கூறி இதற்கு நேற்று காலை போலீசார் திடீர் தடை விதித்தனர்.இதை எதிர்த்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ், இக் கூட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதே நேரத்தில் புலிகளுக்குஆதரவாகப் பேசக் கூடாது என தடை விதித்தார். இதையடுத்து உலகத் தமிழக் பேரவை துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது.
உலகத் தமிழர் பேரவை உருவானது எப்படி?:
(நமது அலைகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த கட்டுரை இது)
1999ம் ஆண்டு சென்னையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெள்ளி விழா மற்றும் 7-வது மாநாடுநடந்தது. அந்த மாநாட்டின்போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றைவெளியிட்டார்.
உலகளாவிய தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பெருங்கூட்டமைப்பு, உலகத்
தமிழர்களுக்கு ஒரு வங்கி, உலகத் தமிழருக்கு தனிக் கொடி, உலகத் தமிழர்களின் புகழ் பாடும் பாடல், உலகத்தமிழருக்கு தேசிய உடை ஆகியவை தான் இந்த 5 அம்சத் திட்டம்.
இந்த ஐந்து அம்சங்கள் குறித்தும் சென்னையில் நடந்த பல நாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாட்டுபிரதிநதிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றுஉருவாக்கப்பட்டது.
குழுவின் அமைப்பாளர்களாக பழ.நெடுமாறன், இர.ந.வீரப்பன் (மலேசியா), செல்லையா (கனடா), அலன்அனந்தன் (பிரான்ஸ்), டாக்டர் கோவிந்தசாமி, காமாட்சி சோதிநாதன் (தென் ஆப்பிரிக்கா), பஞ்சவர்ணம்,மாரிமுத்து (பர்மா), இளம்பிறை ரகுமான் (தமிழ்நாடு), மணி வெள்ளையன் (மலேசியா) ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
இந்த ஐந்து அம்சத் திட்டத்திற்கு உலகின் பல மூலைகளிலிருந்தும் தமிழர்கள் வரவேற்பு தெரிவிதும், உற்சாகம்தெரிவித்தும் கடிதங்களை அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு உலகத்தமிழர் அமைப்புகள் அனுப்பிய கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன் பிறகு தமிழர் அமைப்புகளைஒருங்கிணைக்கும் பெருங்கூட்டமைப்புக்கு உலகத் தமிழர் பேரமைப்பு என்று பெயர் சூட்டப்பட்டது.
அமைப்பிற்கான கொடி குறித்து முடிவு செய்ய பச்சையப்பன் தலைமையிலும், தேசிய உடை குறித்து முடிவு செய்யஎம்.ஏ.ரகுமான் தலைமையிலும், உலகத் தமிழர் வங்கி அமைப்பது குறித்து முடிவு செய்ய டாக்டர் எஸ்.என்.தெய்வநாயகம் தலைமையிலும், அமைப்பின் சட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்ய சுப.வீரபாண்டியன் தலைமையிலும், உலகத் தமிழர் பாடல் குறித்து முடிவு செய்ய காசி அனந்தன் தலைமையிலும் குழுக்கள்அமைக்கப்பட்டன.
நெடுமாறனுடன் பேட்டி:
இந்த புதிய அமைப்புகள் குறித்து பழ. நெடுமாறனிடம் உரையாடினோம். அவரது பேட்டியிலிருந்து சில துளிகள் ...
உலகத் தமிழர் வங்கி:
உலகத் தமிழர் வங்கி என்பது உலகத் தமிழர்களின் வணிக, தொழில் நலன்களைப் பேணவும், காக்கவும்,வளர்ந்தோங்கச் செய்யவும் அமைக்கப்படுகிறது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த வங்கி செயல்படும். இந்திய ரிசர்வ் வங்கியின்விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வங்கி நடக்கும். டாக்டர் எஸ்.என்.தெய்வநாயகம் தலைமையில் இதுதொடர்பானபணிகளை ஆராயகுழு அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் இந்த வங்கியின் துவக்க விழா நடைபெறவுள்ளது. முதலில்சென்னையில் துவக்கப்படும் இந்த வங்கி நாளடைவில் உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கடன் வழங்குவது உள்ளிட்ட பிற வங்கிகளில் திடைறையில் உள்ள சேவைகளைப் போலவே உலகத் தமிழர்வங்கியும் செயல்படும். இந்த வங்கியில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உலகத் தமிழர் பேரமைப்பு:
இந்த அமைப்பு ஒரு அம்ப்ரல்லா அமைப்பு. அதாவது பல்வேறு உலகத் தமிழர் அமைப்புகள் அனைத்தையும் ஒரேகுடையின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த அமைப்பு அமைக்கப்படவுள்ளது.
இந்த அமைப்பின் கீழ் வரும் அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தங்களது தனித்தன்மையை இழக்காமல்,அதே நேரத்தில், பொதுவான நோக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும். உலகத் தமிழர் பேரமைப்பின்ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுகிறேன். ஒரு கமிட்டியும் உள்ளது.
இது தற்காலிக நிர்வாகம்தான். உலகத் தமிழர் பேரமைப்பு முறையாகத் துவக்கப்படும் போது முறையானநிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றார் நெடுமாறன்.
பேரமைப்பின் நோக்கங்கள்:
தமிழர் வாழ்வியல் நலன்கலைப் பாதுகாத்தல், தமிழர்களின் மொழி, கலை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப்பாதுகாத்தல், தமிழர்களின் குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள், மானுட உரிமைகள் ஆகியவற்றைப்பாதுகாத்தல் ஆகியவை பேரமைப்பின் முக்கிய நோக்கங்கள்.
உலகத் தமிழருக்கு தனிக்கொடி:
உலகத் தமிழர்களுக்கென்று தனிக் கொடி உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கொடி நீல நிறத்தில்இருக்கும். நடுவில் வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிறத்தில் உலக உருண்டையும் அதன் மீது பனை மரம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எழுத்துக்கள் மஞ்சள் நிறத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
தமிழர் தேசிய உடை:
தமிழர்களின் கலை, மொழி, பண்பாட்டு விழாக்களின்போது தங்களது தேசிய உடையை அணிந்து கொண்டு கலந்துகொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு விரும்புகிறது. அதற்கென, தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும்வகையிலான தேசிய உடையை அமைப்பு உருவாக்கியுள்ளது.
ஆண்களுக்கு ..
ஒரு செ.மீ அகலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளை நிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப் பட்டியோடுகூடிய முழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (ஒரு செமீ அகலமுள்ளஇரு கோடுகள் இருக்கலாம்).
பெண்களுக்கு ..
7 செமீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரை போட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்கு நிற ரவிக்கையும்.
உலகத் தமிழர் பண் (பாடல்):
தமிழ்நாட்டுக்கென்று தனி தேசியப் பாடல் உள்ளது. அதேபோல இலங்கையிலும் ஈழத் தமிழர்களுக்கென்று தனித்தேசியப் பாடல் உள்ளது. ஆனால் உலகத் தமிழர்கள் மொழி, கலை, பண்பாட்டு விழாக்களுக்காக கூடும்போதுஅனைவரும் இணைந்து பாடத்தக்க
வாழ்த்துப் பாடல் மிக இன்றியமையாததாகும்.
அத்தகைய பாடலாக இலங்கைக் கவிஞர் காசி அனந்தன் இயற்றிய பாடல் ஏற்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடலின் விவரம்: (பாடலாசிரியர் காசி.அனந்தன்)
இணைந்தோம்! உலகத் தமிழராய்
நாங்கள் இணைந்தோம் !
நினைந்தோம்! எங்கள் தமிழ் உயிர்
உயிரென நினைந்தோம் ! (இணைந்தோம்)
தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்
தாங்கினோம் இன்பம் தாங்கினோம் !
அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்
அன்பினால் உலகை வாங்கினோம் ! (இணைந்தோம்)
சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம்
செய்வோம் என ஆணை ஏந்தினோம் !
விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்
விடுதலை வானில் நீந்தினோம் ! (இணைந்தோம்)
மானமே வாழ்வாய் நின்றோம் !
மலைகளை மோதி வென்றோம் !
ஆனால், இந்த தனித் தமிழ் தேசியப் பாடல், தமிழ்க் கொடி ஆகிய முயற்சிகளை இந்திய உளவுப் பிரிவானஇன்டலிஜென்ஸ் பீரோவும் தமிழக அரசும் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துள்ளன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications