வைகோவை விசாரிக்க பூந்தமல்லியில் சிறப்பு நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்குகளை விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் சிறப்பு நீதிமன்றத்தைதமிழக அரசு அமைத்துள்ளது.

பொடா வழக்குகளை வழக்கமான நீதிமன்றங்களில் விசாரிக்க முடியாது. இதையடுத்து தடா நீதிமன்றங்களில் இதை விசாரிக்கத்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது.

இப்போது பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தை பொடா வழக்கு நீதிமன்றமாக தமிழக அரசுமாற்றியுள்ளது.

வைகோ, 8 மதிமுகவினர் மற்றும் பாவாணன் ஆகியோர் மீதான பொடா வழக்குகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.இவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்வது, ஜாமீனில் விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளை இந்த நீதிமன்றம் கையாளும்.

மதுரையில் மத்திய அமைச்சர்கள்:

இந் நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுகவினரானசெவந்தியப்பன், கணேச மூர்த்தி ஆகியோரை மதிமுக மத்திய அமைச்சர்களான கண்ணப்பனும் செஞ்சி ராமச்சந்திரனும் இன்றுநேரில் சந்தித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்கள், தமிழகத்தில் பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அந்தச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வருமாறு மதிமுக கோராது. அதே போல சட்டத்தை வாபஸ் பெறவும் சொல்ல மாட்டோம்.

அதே நேரத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடருவோம். இந்த விவகாரத்தில அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க மதிமுகவின் நிர்வாகக் குழு வரும் 27ம் தேதிசென்னையில் கூடும்.

சிறையில் அனைத்து மதிமுகவினரும் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாமல் கைதுசெய்யப்பட்ட வேறு 4 மதிமுக தொண்டர்களையும் ஜாமீனில் வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

வைகோவே வாதாடுவார்:

தனது கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வழக்கில் தனக்காக வழக்கறிஞர் யாரையும் வைத்துக்கொள்ளாமல் தானே வாதாட வைகோ திட்டமிட்டுருப்பதாகத் தெரிகிறது.

இதையடுத்து சிறையில் சட்டப் புத்தகங்களை படிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+