ராமதாசின் பகல் கனவு பலிக்காது என்கிறார் ஜெயலலிதா
சென்னை:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கனவு பலிக்காது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றுராமதாஸ் சமீபத்தில் கூறியிருந்தார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இவருடைய கருத்துக்குக் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கை கண்டனத்துக்குரியது மட்டுமின்றிஅபாயகரமானதும் கூட.
தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தைஇரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டு வருகிறார். ஆனால் அவருடைய இந்தக் கனவு பலிக்காது.
இந்தக் கோரிக்கை மூலம் ஆரோக்கியமற்ற மனோபாவமும் குறுகிய மனப்பான்மையும் கொண்டவர் என்பதைராமதாஸ் நிரூபித்துள்ளார்.
ஜாதியின் பெயரால் தமிழகம் பிரிக்கப்படுவதை அதிமுக அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது. இது நாட்டின்நலனுக்கே எதிரானது.
குறிப்பிட்ட ஜாதிக்காக தமிழகத்தைக் கூறு போட நினைக்கும் ராமதாஸ் குறித்து நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications