ராமதாசின் கருத்தை ஏற்க முடியாது: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கருத்தை ஏற்க முடியாதநிலையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கை மிகவும் விபரீதமானது. பெரும்சிக்கல்களையும் கிளப்பி விடக் கூடியது.
மேலும் ராமதாசின் இந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்பே இல்லை.
அதனால் இதுகுறித்து ராமதாஸ் மேலும் வலியுறுத்திப் பேசாமல் இருப்பதே அவருக்கும் தமிழகத்துக்கும் நல்லது.
அவருடைய இந்தக் கருத்தை ஏற்க முடியாத நிலையில் திமுக உள்ளது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications