மழை வேண்டி மதுரையில் முஸ்லீம்கள் சிறப்பு பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மழை பெய்ய வேண்டும் என்று கோரி இன்று மதுரையில் 500க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டு பிரார்த்தனைநடத்தினார்கள்.
மதுரையை கடந்த சில மாதங்களாகவே மிரட்டி வந்த குடிநீர் பஞ்சம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
வைகை அணை வறண்டு விட்டதைத் தொடர்ந்து மதுரை கார்ப்பரேஷன் மூலமாகக் குழாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படுவதும் அநேகமாக நிறுத்தப்பட்டு விட்டது.
குடிக்க நீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அடிக்கடி மக்கள் காலிதண்ணீர் குடங்களுடன் சாலை மறியலும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மழை வேண்டி 500க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள்.
மதுரை நகர காஜி சயீது காஜா முகைதீன் தலைமையில் இந்தச் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications