குடிநீர் பஞ்சம்: நெல்லையில் காலி குடங்களுடன் அமைச்சரை "கெரோ" செய்த பெண்கள்
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நைனார் நாகேந்திரனை காலிகுடங்களுடன் பெண்கள் "கெரோ" செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சியாக உருவெடுத்து ஆறு ஆண்டுகளாகி விட்ட போதிலும் அங்கு குடிநீர் உள்ளிட்ட பலஅடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் அமைச்சர், எம்.எல்.ஏ. என்று யார் வந்தாலும் அப்பகுதி மக்கள் அவர்களை சும்மா விட்டுவிடுவதில்லை.அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு உண்டு-இல்லை என்று ஆக்கி விடுவார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் மனுக்களைப்பெறுவதற்காக நைனார் நாகேந்திரன் நேற்று காலை வந்தார். அவருடன் திருநெல்வேலி மாநகர அதிமுக மேயரானஜெயராணியும் வந்தார்.
ஆனால் தொண்டர்கள் புடைசூழ வந்த அமைச்சருக்கும் மேயருக்கும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளிக்காமல்அவர்களை வழிமறித்து "கெரோ" செய்தனர்.
""இதோ இந்த வண்ணார்பேட்டைக்கு வெகு அருகில் தான் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. ஆனால் எங்களுக்குக்குடிநீர் இல்லை. பாளையங்கோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த குடிநீரும் கடந்த சில மாதங்களாகவரவில்லை. மனு கொடுத்து, மனு கொடுத்து நாங்கள் நொந்து போய் விட்டோம். மனு வாங்கிய கையோடு நீங்கள்ஓடிப் போய் விடுகிறீர்கள். அது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை"" என்றுஅடுக்கடுக்காகப் புகார் தெரிவித்த மக்கள், குறிப்பாக பெண்கள் அமைச்சரைச் சுற்றி வளைத்துக் கொண்டு கோஷம்எழுப்பினர்.
ஆனால் அம்மக்களிடம் அமைதியாகப் பேசாமல் நைனார் நாகேந்திரன் சிடுசிடுவென்று பேசினார். ""என்னமோநீங்கள் 99 முறை இதுவரை மனு கொடுத்த மாதிரியும், இப்போ 100வது முறை தருவது போலவும் பேசுகிறீர்களே""என்று கோபத்துடன் அவர் கூறினார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு மக்களை மேலும் கொதிப்படையச் செய்தது. இதையடுத்து மேலும் அதிகமாகக் குரல்கொடுத்துக் கொண்டு அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு வந்த திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் ஹர்மந்தர்சிங், ""உங்கள் பகுதி குடிநீர் தொட்டியில்என்ன பிரச்சனை? அதை என்னிடம் காட்டுங்கள்"" என்று கூறியவாறு மக்களைத் தனியாக அழைத்துச் சென்றார்.
இதையடுத்து மக்கள் கூட்டம் கலைந்து கமிஷனருடன் சென்றனர். அதன் பிறகு தான் நைனார் நாகேந்திரன்நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அங்கிருந்து நைசாக "எஸ்கேப்" ஆகிவிட்டார். மனு வாங்குவதற்காகத்தன்னை அழைத்து வந்த அதிமுகவினர் மீதும் அவர் எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.
திருநெல்வேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏதான் நைனார் நாகேந்திரன் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications