வைகோ கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை மதிமுக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர மதிமுக முடிவு செய்துள்ளது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கடந்தவெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது சட்டரீதியாக இந்தக் கைதை எதிர்த்து வழக்கு தொடர அவருக்கு பெர்னாண்டஸ் ஆலோசனை கூறினார்.

பொடா சட்டத்தின் கீழ் வைகோவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கவோ அல்லது அவரைச் சிறையில்அடைக்கவோ மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளுக்கு அதிகாரம் கிடையாது என்று மதிமுகவினர்கூறிவருகின்றனர்.

பொடா சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்க தனி நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம்உண்டு என்றும் கூறும் மதிமுக இந்த ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வைகோவின் கைது செல்லாதுஎன்று கோரி வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் சட்ட அமைச்சரும் பாஜகவின் செய்தித் தொடர்பாளருமான அருண் ஜேட்லி நாளைவைகோவைச் சந்திப்பதற்காக வேலூர் வருகிறார்.

இது தொடர்பாக அருண் ஜேட்லியுடனும் கலந்து ஆலோசித்த பிறகு நாளையோ அல்லது நாளை மறுநாளோ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+