திருச்சியில் லாட்டரி விற்கும் பார்வையற்றவர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் லாட்டரிச் சீட்டு விற்கும் பார்வையற்றவர்கள் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களிலும் பார்வையற்ற பலரும் லாட்டரிச் சீட்டு விற்று வருவதைக்காணலாம். தமிழகத்திலேயே திருச்சியில் தான் பார்வையற்றவர்கள் அதிக அளவில் லாட்டரி விற்கும் தொழிலில்ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறலாம்.
இந்நிலையில் திருச்சியில் இன்று லாட்டரிச் சீட்டு விற்றும் பார்வையற்றவர்கள் திடீர் உண்ணாவிரதத்தில்ஈடுபட்டுள்ளனர்.
நிரந்தரமான ஒரு வேலை கிடைக்கும் வரை தங்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிவாரணத் தொகையைநிறுத்தக் கூடாது, தாங்கள் லாட்டரி விற்பதை ஒரு தொழிலாக தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இன்றைய உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications