ஜெயலலிதாவை வரவேற்பதை தவிர்த்த மதுரை மேயர்
மதுரை:
நேற்று மதுரைக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்கச் செல்வதைத் தவிர்த்து விட்டார் மதுரைமேயர் செ. ராமச்சந்திரன்.
மதுரை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கும்படி பேசுவதற்காக ஜெயலலிதாவிடம் ராமச்சந்திரன் "அப்பாய்ன்ட்மென்ட்"கேட்டிருந்தார்.
ஜெயலலிதாவும் அதற்குச் சம்மதித்து உடனடியாக சென்னை வந்து தன்னைச் சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மதுரை மாநகராட்சிக் கவுன்சிலர்களுடன் தலைமைச் செயலகத்திற்குச்சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து நிதியுதவி கோரினார் ராமச்சந்திரன்.
திமுகவைச் சேர்ந்த ஒரு மேயர் ஜெயலலிதாவைச் சென்று சந்தித்தது அப்போது அரசியலாக்கப்பட்டது. இந்தச்சந்திப்பின் மூலம் ராமச்சந்திரன் அதிமுகவில் சேரப் போகிறார் என்ற செய்திகளும் வெளியாகின.
ஜெயலலிதாவை ராமச்சந்திரன் சந்தித்த விஷயம் திமுகவினரிடையேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்திமுகவை விட்டு விலகிப் போய் விடுவாரோ என்று பல திமுக பிரமுகர்கள் கூட அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று மதுரை வந்தார் ஜெயலலிதா.இதையடுத்து அவரை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்க ராமச்சந்திரன் செல்வாரா மாட்டாரா என்றவிவாதம் நேற்று முன் தினமே தொடங்கி விட்டது.
ஆனால் மீண்டும் எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வதை விரும்பாத ராமச்சந்திரன் ஜெயலலிதாவைவரவேற்கச் செல்வதையே தவிர்த்து விட்டார்.
மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் விமானநிலையத்திற்குச் சென்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.
கிராமங்களில் கம்ப்யூட்டர் புரட்சி:
இதையடுத்து மேலூருக்குச் சென்ற ஜெயலலிதா அங்கு ரூ.127 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளுக்குஅடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில்,
தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டிலேயே தமிழகம் தான் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கம்யூட்டர்களையும் இன்டர்நெட்டையும் கொண்டுசெல்வது தான் என்னுடைய ஆசை.
இவ்வாறு அனைத்து கிராம மக்களும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கினால் நம் மாநிலத்தில் ஒருகம்ப்யூட்டர் புரட்சியே உருவாகும்.
இது தொடர்பாக ஏற்கனவே சில சம்பவங்கள் தமிழக கிராமங்களில் நிகழ்ந்துள்ளன.
மேலூர் தாலுகாவில் உள்ள டி. உலகுபிச்சான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு படித்த இளம்பெண், இ-மெயில்மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெண்டைக்காய் பயிர்களைக்காப்பாற்றியுள்ளார்.
அதேபோல் இதே கிராமத்தில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன் வெப் கேமரா மூலம் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு கண்புரை நோய் குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போதே தமிழகத்தில் ஒரு கம்ப்யூட்டர் புரட்சி ஆரம்பித்து விட்டது என்று கூட கூறலாம் என்றார்ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications
