சுதந்திர தினத்தை சீர்குலைக்க 25 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்
டெல்லி:
டெல்லி உள்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த ஏமன் நாட்டு தீவிராதி தலைமையில் 25 மனித வெடிகுண்டுகள் நாட்டுக்குள்நுழைந்திருப்பதாக மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில அரசுகளும் முக்கிய இடங்களுக்குபாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கவுள்ள நமது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் நாச வேலைளில் ஈடுபட தீவரவாதிகள்தயாராகி வருகின்றனர் என மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கூறியுள்ளது.
வெறும் வெடிகுண்டுத் தாக்குதல்களாக இல்லாமல் மனித வெடிகுண்டுகள் மூலம் அசம்பாவித செயல்கள் நடத்தப்படலாம் என்றுதெரியவந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில காவல்துறைகளுடனும் ஐ.பி. ஆலோசனை நடத்தி வருகிறது. காவல்துறைகளுடன்இணைந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஐ.பி. இறங்கியுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த பத்ருதீன் என்பவன் தலைமை வகிக்கப் போவதாகத் தெரியவந்துள்ளது. இவனதுதலைமையில் 25 மனித வெடிகுண்டுகள் காஷ்மீருக்குள் ஊடுருவி விட்டதாகவும், அவர்கள் சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் திட்டத்துடன்நாடு முழுவதும் பரவ உள்ளதாகவும் தெரிகிறது.
இதையடுத்து ஜம்மூவில் இருந்து வரும் அனைத்து ரயில்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுவருகின்றன. காஷ்மீரில் நடத்தப்படும் தாக்குதல்களால் பாகிஸ்தானுக்கு உலக அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டு வருவதால் இம் முறைகாஷ்மீரில் எந்தத் தாக்குதலையும் நடத்த வேண்டாம் என இந்தக் கும்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முழுக்க முழுக்க காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் பிற பகுதிகளில் தான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளன என்ற அதிர்ச்சிசெய்தியையும் அனைத்து மாநில காவல்துறைகளும் உள்துறைச் செயலாளர்களுக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவு அனுப்பி வைத்துள்ளது.
வி.ஐ.பிக்களைக் கொல்ல முயற்சி நடக்கலாம் என்பதால் அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துமாறுஉத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மக்கள் கூடும் பஸ் நிலையங்கள், முக்கியகட்டடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், பெங்களூர், சென்னை, மும்பை, குஜராத்தின் சில பகுதிகள் குறி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.நாட்டின் வட-கிழக்குப் பகுதிக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து தமிழக போலீஸ் தப்பவிட்ட இமாம் அலியும் ஏதாவது நாச வேலையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதால்தமிழகம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.
சாதாரண உடையில் ஆயிரக்கணக்கான மத்திய உளவுப் பிரிவினரும் மாநில போலீசாரும் முக்கிய இடங்களை கண்காணிக்கஆரம்பித்துவிட்டனர். சுதந்திர தினத்துக்கு முன்னதாகவே இந்தத் தாக்குதல்கள் நடக்கலாம் என்று ஐ.பி. கூறியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications