For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி கல்லூரியில் ராகிங்: மாணவர் குத்தி கொலை- முதல்வர் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் ராகிங் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் அழகர்சாமி என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட அரசுக் கலைக் கல்லூரியின்முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளார்.

ராகிங்கைத் தடுக்க இவர் தவறியதற்காகவும் பணியில் பொறுப்பில்லாமல் இருந்த காரணத்தினாலும் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகதமிழக அரசு அறிவித்துள்ளது.

கொலை செய்த மாணவன் ஆறுமுகம் மற்றும் அவனுக்கு உதவிய ரவுடிக் கும்பல் தலைமைறைவாகிவிட்டது. அவர்களைப் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுக்கு உதவிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலையை கண்டித்து திருச்சியில் இன்று பல கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல்,ஆர்பாட்டங்களையும் நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று உடனடி நடவடிக்கை கோரி மனுகொடுத்தனர்.

திருச்சி பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்தது.

காஜாமலையில் உள்ள இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று தான் வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் கல்லூரிக்குவந்த அவர்களை இரண்டாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் சில மாணவர்கள் ராகிங் செய்தனர். புதிய மாணவிகளிடம் மிகஅநாகரீகமாக நடந்து கொண்டனர் இந்த எருமை மாடுகள்.

இந்தக் கும்பலுக்கு 3ம் ஆண்டு கணிதம் படிக்கும் ஆறுமுகம் என்ற மாணவன் தலைமை வகித்தான். இந்தக் கும்பலிடம் ரமேஷ் என்ற புதியமாணவன் மாட்டிக் கொண்டான். அவனை பேண்டைக் கழற்றச் சொல்லி இந்தக் கும்பல் அடாவடி செய்தது. அப்போது ரமேஷ், என்அண்ணன் அழகர்சாமியும் இதே கல்லூரியில் தான் 3ம் ஆண்டு படிக்கிறார் என்று கூறியுள்ளான்.

உடனே உன் அண்ணன் என்ன பெரிய கொம்பா? என்று கேட்ட ஆறுமுகம் அந்த மாணவனை அடித்தான்.

இது குறித்து ரமேஷ் தனதுஅண்ணன் அழகர்சாமியிடம் போய் கூறியுள்ளார். உடனே அழகர்சாமி தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன்ஆறுமுகத்திடம் வந்தார். ஏன் இப்படி ராகிங் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனையை வெளியில் போய் பேசலாம் என்று கூறிய ஆறுமுகம் கோஷ்டி அவர்களை அழைத்துக் கொண்டு கல்லூரிக்க வெளியேவந்தது. அங்கு அழகர்சாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோதே ஆறுமுகம் தனது கும்பலில் சிலரின் காதில் ஏதோ சொன்னான்.

உடனே அவர்கள் பைக்குகளில் அங்கிருந்து வேகமாக சென்றனர். சென்ற சிறிது நேரத்தில் ஒரு கூலிக் கும்பலை அவர்கள் அழைத்துவந்தனர். இந்த அடாவடிக் கும்பலைப் பார்த்தவுடன் அழகர்சாமியுடன் வந்த பிற மாணவர்கள் பயந்து போய் பின் வாங்கிவிட்டனர்.

கூலி ஆட்கள் அழகர்சாமியை தாக்கினர். பின்னர் அவர்கள் அழகர்சாமியை பிடித்துக் கொள்ள அவரை ஆறுமுகம் கத்தியால் சரமாறியாகக்குத்தினான். நெஞ்சிலும் வயிற்றிலும் பல குத்துகள் வாங்கிய அழகர்சாமியை தூக்கி வீசிவிட்டு ஆறுமுகம் அந்த ரெளடிக் கும்பலுடன்தப்பிவிட்டான்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அழகர்சாமியை அவரது வகுப்பு மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தால் கல்லூரிக்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முதலாமாண்டு மாணவ- மாணவிகள் உடனடியாக கல்லூரியைவிட்டுவெளியேறினர். இந்தச் சம்பவத்தயடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகத்துக்கும் அழகர்சாமிக்கும் இடையே கல்லூரி மாணவர் தேர்தலில் முன் விரோதம் இருந்து வந்தது.

இதனால் தான் அழகர்சாமியின் தம்பி என்று தெரிந்தும் ரமேஷ் என்ற மாணவனை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்துள்ளான் ஆறுமுகம்.பிரச்சனை வெடிக்கும் என்று தெரிந்தே அவன் கத்தியுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.

இந்தக் கல்லூரியில் ரவுடித்தனம் செய்து வந்த ஆறுமுகம் உள்ளிட்ட மாணவர்களை அடக்க கல்லூரின் முதல்வர் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று தெரிகிறது. அதன் விளைவாகவே இந்தக் கொலை நடந்துள்ளது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்தக் கும்பல் பரமகுடி பகுதியில் பதுங்கியிருப்பதாகத்தெரியவந்துள்ளது. விரைவில் இந்தக் கும்பல் பிடிபடும் என போலீசார் தெரிவித்தனர். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரதீப்,ஆனந்த குமார் ஆகிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் கல்லூரி மாணவர்களை இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளில் அடியாட்கள் நுழைவது, கஞ்சாவியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்ற சம்பந்தமே இல்லாத ஆட்கள் தலையிடுவது போன்றவை அதிகரித்து வருகிறது. இந்தவிவகாரத்திலும் வெளியாட்கள் வந்த பின்னர் தான் வாக்குவாதம் முற்றி கத்திக் குத்தில் போய் முடிந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X