திருவாவடுதுறை துணை மடாதிபதி "டிஸ்மிஸ்"
குத்தாலம்:
திருவாவடுதுறை துணை மடாதிபதியான காசி விஸ்வநாத சுவாமிகளைப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்.
கடந்த 7ம் தேதி இரவு திருவாவடுதுறை ஆதீனத்தின் படுக்கையறை அருகே நான்கு பேர் விஷ ஊசியுடன் நின்றுகொண்டிருந்தனர். அவரைக் கொலை செய்வதற்காகத் தான் இந்த நான்கு பேரும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
இந்தக் கொலை முயற்சிக்கு மறுநாளே துணை மடாதிபதி ஏராளமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்றார்.
மேலும் இந்தக் கொலை முயற்சிக்கு துணை மடாதிபதி தான் காரணம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்துதுணை மடாதிபதி காசி விஸ்வநாத சுவாமிகள் உள்ளிட்ட 11 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் காசி விஸ்வநாத சுவாமிகளை துணை மடாதிபதி பதவியிலிருந்து நீக்கியுள்ளார் திருவாவடுதுறைஆதீனம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாவடுதுறை ஆதீனம் இளவரசாகிய காசி விஸ்வநாத பண்டார சன்னதி என்பவரை இளவரசு பதவியிலிருந்தும்திருக்கூட்டத்து தம்பிரான் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்கிறோம்.
ஆதீனத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்போ உரிமையோ கிடையாது என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாத சுவாமிகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருந்த போதிலும் இந்தப் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காசிவிஸ்வநாத சுவாமிகளின் வக்கீல் சோம சேகர் நேற்று மயிலாடுதுறையில் தெரிவித்தார்.
இதற்கிடையே காசி விஸ்வநாத சுவாமிகளின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதி நடக்கிறது.
துணை மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு:
இதற்கிடையே துணை மடாதிபதியின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு மேலும் 15நாட்களுக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மயிலாடுதுறை செசன்ஸ் நீதிமன்றத்தில் துணை மடாதிபதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 15நாட்களுக்குக் காவலில் வைக்குமாறு நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து துணை மடாதிபதி மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த துணை மடாதிபதி யார்?
இதற்கிடையே அடுத்த துணை மடாதிபதி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் தனக்குக் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்டளைதம்பிரான்களிடம் ஆலோசனை நடத்தப் போகிறாராம்.
அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அந்தத் தம்பிரான்களில் ஒருவரைத் தான் துணை மடாதிபதியாகதிருவாவடுதுறை ஆதீனம் அறிவிப்பார் என்று தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications