முதல்வர்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது: கருணாநிதி
சென்னை:
குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதே நேரத்தில் நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கருதக் கூடாதுஎன்றும் கூறினார்.
டாக்டர் கலாமின் பதவியேற்பு விழாவுக்கு தன்னே அழைக்காததற்கு மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர்ஜெயலலிதா. ஆனால், விழாவில் கலந்து ஜெயலலிதாவிடம் இருந்து முறையான கோரிக்கை வராததால் தான் அவரை அழைக்கவில்லைஎன மத்திய அரசு கூறியுள்ளது.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,
சுதந்திர பெற்ற காலத்தில் இருந்தே மாநில முதல்வர்களை இது போன்ற நிகழ்ச்சிளுக்கு அழைப்பதில்லை என்ற மரபு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதை நிரந்தரமாக்கிவிடக் கூடாது.
விண்ணப்பம் அனுப்பும் முதல்வர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு பிற முதல்வர்களை புறக்கணிக்கும் போக்கை மத்திய அரசுஉடனே நிறுத்த வேண்டும்.
அழைப்பிதழ் என்பது விரும்பி அனுப்பப்படும் ஒன்று. கேட்டுப் பெரும் விஷயம் அல்ல. இனிமேலாவது முக்கிய நிகழ்ச்சிகளில் மாநிலமுதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பி மதிக்கும் பழக்கத்தை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும்.
மாநில அரசுகளின் உரிமைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது தான் என்னுடைய நிலை. குடியரசு தினத்தன்றுமுதல்வர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதி தர வேண்டும் என்று போராடி அந்த உரிமையைப் பெற்றுத் தந்தவன் நான் என்பதை இங்குநினைவூட்ட விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications