ஜெ. விவகாரம்: மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை- நாயுடு
மதுரை:
டாக்டர் கலாமின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததில் மத்திய அரசுக்குஎந்தப் பங்கும் இல்லை என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும், அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினர்களை வரவேற்கும்ஏற்பாடுகளையும் செய்வது ஜனாதிபதி மாளிகையும் நாடாளுமன்ற அதிகாரிகளும் தான்.
இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் தான் அதில் இறுதியானவை.
இதனால் ஜெயலலிதாவை வேண்டுமென்றே மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார் நாயுடு.
பின்னர் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு மாநிலங்களும் முன் வரவேண்டும். அல்லது நீதிமன்றம் மூலம் தீர்வு காணத் தயாராக இருக்க வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிவேட்பாளருக்கு அதமுக ஆதரவைத் தந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்றார். பின்னர் புதுக்கோட்டை சென்ற நாயுடு அங்குநடக்கும் 2 நாள் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மத்திய அரசு விளக்கம்:
ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் தனக்கு அழைப்பு விடுக்காதற்கு மத்திய அரசைக் குற்றம் சாட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கைக்கு உள்துறை அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆந்திரம், காஷ்மீர், ராஜஸ்தான் முதல்வர் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தனர். அதைநாடாளுமன்ற அதிகாரிகள் ஏற்று அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தனர்.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்தக் கோரிக்கையும் வரவில்லை. முறையான கோரிக்கைவராததால் தான் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சகத்தை தமிழக அரசின் செயலாளர் தொடர்பு கொண்டபோதுமுதல்வர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் உத்தேசம் இல்லை என்று முகத்தில் அடித்தது மாதிரி பதில் கிடைத்ததாக நேற்று ஜெயலலிதாகூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications