வைகோ வீட்டை சோதனையிட போலீசாருக்கு நீதிமன்றம் தடை
மதுரை:
வைகோ உள்பட பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 9 மதிமுகவினரின் வீட்டை சோதனையிட கூடாது என க்யூ பிராஞ்ச் போலீசாருக்குஅனுமதி தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வைகோ கைது வழக்கை க்யூ பிராஞ்ச் போலீசார் தான் நடத்தி வருகின்றனர்.
நேற்று மதுரை திருமங்கலம் செசன்ஸ் நீதிமன்றத்தி க்யூ பிராஞ்ச் போலீசார் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் விடுதலைப் புலிகளுக்கும்வைகோவுக்கும் உள்ள தொடர்பு குறித்து விவரங்கள் சேகரிக்க அவரது வீட்டை சோதனையிட அனுமதிக்க வேண்டும். அதே போலபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மற்ற 8 மதிமுகவினரின் வீட்டையும் சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்று போலீசார்கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடாசலபதி, வைகோவின் வீட்டையோ, பிற மதிமுகவினரின் வீட்டையோ சோதனையிடபோலீசாருக்கு அனுமதி தர முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து வைகோ மற்றும் பிற மதிமுகவினரின் வீடுகளை சோதனையிட அனுமதி கோரி சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ளசிறப்பு பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய க்யூ பிராஞ்ச் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications