திருச்சி த.மா.கா. அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்
திருச்சி:
திருச்சி தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தை காங்கிரசார் தாக்கி சேதப்படுத்தினர்.
திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே உள்ளது தியாகி அருணாச்சலம் கட்டடம். இது திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைமைஅலுவலகமாகும். முதலில் இந்தக் கட்சி அலுவலகம் காங்கிரஸ் வசம் இருந்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரசை உருவாக்கியபோது பல நகரங்களில் காங்கிரஸ்அலுவலகஙகளை த.மா.கா. கைப்பற்றியது.
திருச்சியிலும் இதே போல காங்கிரஸ் அலுவலகம கைப்பற்றப்பட்டது. அப்போது முதல் காங்கிரஸ் மற்றும் தமாகா தொண்டர்கள் இந்தஅலுவலகத்துக்கு உரிமை கோரி மோதி வந்தனர்.
இப்போது இரு கட்சிகளும் இணையப் போகின்றன. இருந்தாலும் அலுவலகத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் இன்னும்மோதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று இரவு இந்த அலுவலகத்தில் நுழைந்த சிலர் அங்கிருந்த நாற்காலிகளை அடித்து உடைத்தனர். வெளியில் இருந்தமூப்பனாரின் கட் அவுட்டை பிய்த்து எறிந்தனர். அங்கிருந்த வாகனங்களையும அடித்து சேதப்படுத்தினர்.
தகவல் அறிந்து தமாகா தொண்டர்கள் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் இந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது. தாக்குதல் நடத்தியதுகாங்கிரஸ் தொண்டர்கள் தான் என்று போலீசார் கருதுகின்றனர்.
இச் சம்பவத்தையடுத்து இரு கட்சியினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருகட்சி அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications