காவிரி ஆணையத்தைக் கூட்ட பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் காவிரியில் நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழகத்தின்கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
காவிரி ஆணையக் கூட்டம் நடப்பதற்கு முன்னதாக ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுக்கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூடி தமிழகத்திலும் கர்நாடகத்திலும் உள்ள நீர் நிலைகளை ஆய்வுசெய்து வேண்டும். பின்னர் இந்த நீர் நிலைகளில் உள்ள நீரின் அளவு குறித்து காவிரி ஆணையத்திடம் ஒருவாரத்தில் (ஆகஸ்ட் 19ம் தேதிக்குள்) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உடனடியாக தமிழகத்துக்கு நீர் திறந்து விடுமாறு ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும்,ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
தனது மனுவில், காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குத் தேவையான 52டி.எம்.சி. நீரைத் திறந்து விடாமல் வெறும் 7 டி.எம்.சி. நீரை மட்டும் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது என்று தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என். கிர்பால்,நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தவழக்கை விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில், வரும் ஆகஸ்டு 12ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழு கூடிதமிழகத்திலும் கர்நாடகத்திலும் உள்ள நீர் நிலைகளில் உள்ள நீரின் அளவை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தக் குழுக் கூட்டம் கூடிய ஒரு வாரத்திற்குள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திடம்இந்தக் கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த அறிக்கை கிடைத்தவுடன் காவிரி நதி நீர் ஆணையத்தை பிரதமர் வாஜ்பாய் அவசரமாகக் கூட்டி முடிவெடுக்கவேண்டும். காவிரியில் கர்நாடகம் தண்ணீர் விடவேண்டுமா இல்லையா என்பது குறித்து இந்த ஆணையம் தான்இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications