காவிரி ஆணையத்தை மதித்து நடக்க வேண்டும்: சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசும் கர்நாடக அரசும் காவிரி ஆணையத்தை மதித்து நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை தலைவர் ப. சிதம்பரம் கூறினார்.

இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி கண்காணிப்புக் குழு ஆகஸ்டு 12ம் தேதிக்குள் கூடி ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் காவிரிஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

காவிரி ஆணையத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியிருந்தார்.

இவ்வாறு காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்பது தவறானது என்று அப்போதே நான் கூறினேன்.

தமிழக அரசும் கர்நாடக அரசும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்ததால் தான் காவிரி டெல்டாவிவசாயிகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.

இனிமேலாவது இந்த இரு மாநில அரசுகளும் விட்டுக் கொடுத்து காவிரி ஆணையத்தை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று கூறினார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+