பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறான் லேடன்: இந்தியா
லண்டன்:
சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் இன்னும் சாகவில்லை என்றும் அவன் பாகிஸ்தானில் தான் ஒளிந்துகொண்டுள்ளான் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
உளவுத்துறை மூலமாக மூன்று மாதங்களுக்கு முன் தனக்கு இந்தத் தகவல் கிடைத்ததாக லண்டனில் உள்ள "சேனல் 4நியூஸ்" என்ற தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கும் போது பெர்னாண்டஸ் இந்தப் பரபரப்புத்தகவலைக் கூறினார்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையின் முழுப் பாதுகாப்புடன் பின்லேடன் அந் நாட்டில் ஒளிந்துகொண்டிருப்பதாகவும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
பின் லேடன் பற்றிய விவரங்கள் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பிடம்தெரிவிக்கப்பட்ட போதிலும் சில சமயங்களில் அவனைப் பற்றிய விவரங்களை அந்நாட்டு உளவுத்துறைமுஷாரப்பிடம் கூறுவதில்லை என்றும் பெர்னாண்டஸ் கூறினார்.
இந்த விவரங்களை அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளதாகவும் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தான் இந்தத் தகவலைக் கடுமையாக மறுத்துள்ளது. பாகிஸ்தானை அவமானப்படுத்த வேண்டும்என்பதற்காகவே பெர்னாண்டஸ் இவ்வாறு கூறியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்ரஷித் குரேஷி கூறினார்.
பாகிஸ்தானில் பின் லேடன் இருப்பதாகத் தெரிய வந்தால் அமெரிக்காவுக்குத் தான் முதலில் தகவல் போகும்.நாங்கள் மறைக்க மாட்டோம் என்றும் குரேஷி தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications