ராகிங் செய்தால் 2 ஆண்டு சிறை: திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
திருச்சி:
பள்ளி கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடுபவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அபராதத்துடன் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர் கே. மணிவாசன் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. அரசுக் கல்லூரியில் ராகிங்கைத் தட்டிக் கேட்ட அழகர்சாமி என்றமாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக பிரதீப், ஆனந்தகுமார் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களுடன் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில கூலிப் படையினரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து இக்கல்லூரி முதல்வர் கருணாநிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராகிங் தொடர்பாக விவாதிப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்குஅம்மாவட்ட கலெக்டர் டாக்டர் மணிவாசன் அழைப்பு விடுத்தார்.
அதன்படி இன்று திருச்சி மாவட்ட கல்லூரி முதல்வர்களின் கூட்டம் இன்று அங்கு நடந்தது. சுமார் 40 கல்லூரிமுதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கலெக்டர் ராகிங் செய்பவர்களுக்கு அபராதத்துடன் 2 ஆண்டு சிறைத் தண்டனையும்வழங்கப்படும் என்றார்.
மேலும் இவ்விஷயத்தில் பாரபட்சம் எதுவுமே காட்டப்படாது என்றும் அவர் கூறினார்.
அரசிடம் இன்று விசாரணைக் குழு அறிக்கை:
இதற்கிடையே இந்தக் கொலை குறித்து விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் விசாரணைக் குழுஅமைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்தக் குழு விசாரணை நடத்தியது.
இரண்டாவது நாளாக நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக இந்தவிசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளித்தனர்.
மாணவர்களைத் தவிர எந்தவித சம்மனும் அனுப்பாமலேயே சில பொதுமக்கள் நேரடியாக வந்து இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தனர்.
விசாரணை முழுவதும் முடிந்து விட்ட நிலையில் இன்று மாலை தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படஉள்ளதாக இந்த விசாரணைக் குழுவின் தலைவர் முத்துக்குமரன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications