ஆகஸ்டு 9ல் காவிரி கண்காணிப்புக் குழு கூடுகிறது: தமிழகம் பங்கேற்பு
டெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப வரும் 9ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில்தமிழகமும் பங்கேற்கிறது.
ஆகஸ்டு 12ம் தேதிக்குள் இந்தக் கண்காணிப்புக் குழு கூட வேண்டும் என்றும் அதன் பிறகு ஒரு வாரத்திற்குள்தமிழக மற்றும் கர்நாடக அணைகளில் நீர் இருப்பை ஆய்வு செய்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரிஆணையத்திடம் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 29ம் தேதிஉத்தரவிட்டது.
அதன்படி வரும் 9ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் கூடுகிறது. தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும்பாண்டிச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் காவிரி ஆணையமும் கண்காணிப்புக் குழுவும் செயலற்றுப் போய்விட்டதால் அவை நடத்தும்கூட்டங்களில் இனி தமிழகம் பங்கேற்கப் போவதில்லை என்று கடந்த மாதம் 10ம் தேதி தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜூலை 29ம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி கண்காணிப்புக் குழுவின்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் 9ம் தேதி நடக்கவுள்ள கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான சுகவனேஸ்வர் கலந்து கொள்வார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் 16ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழு தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பைஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்திலும் ஜெயலலிதா கலந்துகொள்வார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே இது தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக இன்று கூடவிருந்த தமிழக அமைச்சரவை கடைசிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி ஆணையக் கூட்டத்திலும் கண்காணிப்புக் குழு கூட்டத்திலும் தமிழகம் கலந்து கொள்வது குறித்துஆலோசனை செய்வதற்காக தமிழக அமைச்சரவை இன்று பகல் 12.15 மணிக்கு சென்னையில் கூடும் என்றுஅறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அமைச்சரவைக் கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவை மீண்டும் கூடும்தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications