கி.வீ.., ப.சி.. கருத்து
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீரமணி கூறியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீரமணி கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்து வரும் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும், விடுதலைப்புலிகள் குறித்தும் பேசுவதாலேயே அது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய அளவு குற்றமாகி விடாது. இதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் வைகோ, இப்போது நெடுமாறன் என வரிசையாக பொடா சட்டத்தின் கீழ் தமிழர் ஆதரவு தலைவர்கள் கைது செய்யப்பட்டுவருவது, அதிமுக அரசு தமிழர் விரோத அரசு என்பது போன்ற அவச் சொல், உலகாளவிய தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டு விடும்.
பொடா சட்டத்தை எச்சரிக்கையுடனும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வேண்டும். பொடா சட்டம் மனிதனை உண்ணப் பாயக்காத்திருக்கும் புலி மாதிரி இருக்கிறது.
பொடாவில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
கண்ணப்பன் பதவி விலக ப.சி. கோரிக்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளை ஆதரிக்க விரும்பும் மத்திய அமைச்சர் கண்ணப்பன் முதலில் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ்ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அரசியல் சட்டப்படி பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்ட கண்ணப்பன்,தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை ஆதரிக்கக் கூடாது.
அப்படியே ஆதரிக்க விரும்பினால் முதலில் பதவியை ராஜினாமா செய்திட வேண்டும்.
அதே நேரத்தில் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்திருப்பதை ஏற்க முடியாது. வெறும் பொதுக் கூட்ட பேச்சைவைத்து அவரைக் கைது செய்தது தவறு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications