வைகோ, நெடுமாறன் கைதை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துகோவை சிறையில் 26 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள். வீரப்பனுடன் இணைந்து நடிகர் ராஜ்குமாரை கடத்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்தப் படைக்கு முதல்வர் ஜெயலலிதாவின பரிந்துரையின்பேரில் மத்திய அரசு தடைவிதித்தது.
இன்று காலை வழக்கமாக உணவு பரிமாறப்பட்டபோது இந்த 26 கைதிகளும் அதைப் பெற மறுத்துவிட்டனர். சிறை அதிகாரிகளிடம் இந்தக்கைதிகள் 26 பேரும் கையெழுத்திட்டு ஒரு கடிதம் தந்ததனர்.
அந்தக் கடிதத்தில், பொடா சட்டத்தை தமிழக அரசு மிகத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. மக்களின் பேச்சு சுதந்திரமும் கருத்துச்சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகிறது. வைகோவும் பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டது மாநில அரசின் அடக்குமுறையைத் தான்காட்டுகிறது.
இந்த இரு தலைவர்களின் கைதையும் எதிர்த்து இன்று நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் இந்தக் கைதிகளுடன் சென்று பேச்சு நடத்தினர். போராட்டத்தைக் கைவிடுமாறு மிரட்டியும் பின்னர்கோரிக்கை விடுத்தும் பார்த்தனர். ஆனால், அதை ஏற்க இவர்கள் மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் அடைக்கப்பட்டுள்ள செல்லுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மருத்துவர்களும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications