சுதந்தர தினத்தன்று டெல்லியை தாக்க தீவிரவாதிகள் பயங்கரத் திட்டம்
டெல்லி:
வரும் 15ம் தேதி சுதந்திர தின விழாவின் போது டெல்லியில் பயங்கரத் தாக்குதல்களை நடத்துவதற்காகத் தீவிரவாதிகள் தற்போதே உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட டெல்லியின் பல சுற்றுப் பகுதிகளில் பதுங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து டெல்லி போலீசார் வழக்கத்திற்கு அதிகமான டென்ஷனுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லிக்குள் புகுந்து தாக்க முயற்சித்தால் எளிதாகப் பிடிபட்டு விடுவோம் என்று கருதும் தீவிரவாதிகள் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முகாமிட்டு தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருவதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் டெல்லிக்கு அருகிலேயே தங்கள் முகாம்களை அமைத்துக் கொண்டால் தான் தாக்குதலை நடத்தி விட்டு எளிதாகத் தப்பித்து விடலாம் என்றும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மீரட், சஹரான்பூர், மொராதாபாத் மற்றும் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவ்விடங்களை உளவுத்துறையினர் சுற்றி வளைத்து தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகள் தான் இப்பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் சிலரின் உதவியுடன் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதைத் தவிர காஷ்மீரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி இளைஞர்களைத் தீவிரவாத அமைப்புகளில் சேரச் செய்வதற்கான முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதையும் உளவுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்
.இதற்காக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல இளைஞர்களைக் கவர்ந்து இழுத்து காஷ்மீரில் தீவிரமான பயிற்சிகளை பயங்கரவாத இயக்கங்கள் அளித்து வருகின்றன.
தினம் ஒரு அரசியல்வாதி...
இதற்கிடையே காஷ்மீர் தேர்தலைச் சீர்குலைப்பதற்காகவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர்.
அங்கு தினமும் குறைந்தது ஒரு அரசியல்வாதியையாவது தாக்கிக் கொல்ல வேண்டும் என்று தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் படைகளை அனுப்பி தேர்தலை வெற்றிகரமாக நடத்துவோம் என்று ஏற்கனவே துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications