கைதை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்ல நெடுமாறன் முடிவு
கடலூர்:
பொடா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கடலூர் சிறையில் அவரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன் நிருபர்களிடம் நெடுமாறன் கூறியதாகத் தெரிவித்ததாவது:
உலகத் தமிழர் பேரவையை சமீபத்தில் தொடங்கினோம். இதன் பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பினேன். அந்த ஓய்வைக் கொடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசியாவில் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கிளம்புவதாக இருந்தேன். ஆனால் வியாழக்கிழமை இரவே அவசரம் அவசரமாகப் போலீசார் என்னைக் கைது செய்துவிட்டனர்.
அமெரிக்காவிலிருந்து விமானத்தில் வந்து சென்னையில் இறங்கியதும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். என்னையோ விமானத்தில் ஏறும் முன்பாக போலீசார் கைது செய்தனர்.
பொடா சட்டத்தை ஆதரித்து வருவதால் அதை எதிர்த்து வைகோ சட்ட ரீதியாக நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
ஆனால் நாங்களோ ஆரம்பத்திலிருந்தே பொடா சட்டத்தை எதிர்த்து வருகிறோம். எனவே பொடா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தது தவறு என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாங்கள் எடுக்கும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் வைகோவுக்கும் உதவும் வகையில் இருக்கும் என்று நெடுமாறன் கூறியதாக சுகுமாரன் தெரிவித்தார்.
இதற்கிடையே பொடா சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் நாளை (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கு தொடரப்படவுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications