காவிரி டெல்டா விவசாயிகளுக்காகவும் கஞ்சித் தொட்டிகள் திறப்பு
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வறுமையால் வாடும் நெசவாளர்களுக்காக ஆங்காங்கே கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட ஆரம்பித்துள்ளன.
இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நிறுத்தியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு இப்போது கிடைப்பதில்லை.
இதையடுத்து கடந்த சில நாட்களில் ஏழை நெசவாளர்களுக்காக ஆங்காங்கே கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. பசி, பட்டினியால் வாடும் நெசவாளர்களுக்காக திமுகவினரும் பல்வேறு இடங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறந்து வருகின்றனர்.
இந்நிலையில் பருவமழை பொய்த்ததோடு கர்நாடக அரசும் காவிரியில் நீர் திறந்து விட மறுத்து விட்டதால் குறுவை சாகுபடியைச் செய்ய முடியாமல் காவிரி டெல்டா விவசாயிகளும் வறுமையால் வாடி வதங்கி வருகின்றனர்.
குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டதால் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து பள்ளிவார்மங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்காக இன்று கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. ஏழை விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் பாத்திரங்களில் கஞ்சி பெற்றுச் சென்றனர்.
"குளிக்கத் தண்ணி இல்ல. குடிக்கக் கூடத் தண்ணி இல்ல" என்று கூறிக் கொண்டு ஒரு வயதான பெண் விவசாயி தலையில் அடித்துக் கொண்டு அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications