சென்னை: தியேட்டரில் ஈவ் டீசிங் செய்த கல்லூரி மாணவர் தலைவர்
சென்னை:
சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் தியேட்டருக்குப் படம் பார்க்க வந்த இளம் பெண்ணைக் கேலி செய்து அவரைத் தாக்கினார்கள். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்கள் சிலரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு பிரபாகரன் என்பவர் தன் தோழியுடன் படம் பார்க்க சென்றிருந்தார். அதே தியேட்டருக்குப் படம் பார்க்க புதுக் கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவர் ருஸ்ஸோ உள்ளிட்ட 50 பேரும் வந்திருந்தனர்.
பிரபாகரனின் தோழியைப் பார்த்து அவர்கள் கேலி செய்தனர். பாட்டுப் பாடி கிண்டலும் செய்துள்ளனர். முதலில் பொறுமையாக இருந்த அந்தப் பெண், பிறகு மாணவர்களைத் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கினர். அதைத் தடுக்க வந்த பிரபாகரனையும் அவர்கள் தாக்கினர்.
இதையடுத்து அந்த தியேட்டரில் காவலுக்கு வந்திருந்த இரண்டு போலீசார் விரைந்து வந்து மாணவர்களை விலக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும் அடி விழுந்தது.
இந்த சம்பவத்தையடுத்து அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்தப் பெண். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறுதியில் ருஸ்ஸோ உள்ளிட்ட சில மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். மாணவர் சங்கத் தலைவரே இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications