போலீசாரை சோதனையிட்ட மதிமுகவினர்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டில் சோதனை நடத்த க்யூ பிராஞ்ச் போலீசார் வந்தபோது அவர்களை மதிமுகவினர்முழுமையாக சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதித்தனர். அதே போல போலீசார் சோதனை நடத்தியதை வைகோவின்உதவியாளர் வீடியோ படமாக எடுத்தார்.
காலை 5.30 மணிக்கு வேன்களில் போலீசார் வந்து இறங்கியபோது அவர்களை எதிர்பார்த்து மதிமுக நிர்வாகிகளும் வைகோவின்வழக்கறிஞர்களும் தயாராக உட்கார்ந்திருந்தனர்.
சோதனை நடத்தனும் என்று உள்ளே வந்த அவர்களிடம் முதலில் கோர்ட் உத்தரவை வாங்கி வழக்கறிஞர்கள் படித்துப் பார்த்தனர்.
வீட்டில் பெண்கள் உள்ளனர். அதனால் பெண் போலீஸ் வந்தால் தான் உள்ளே விடுவோம் என வழக்கறிஞர்கள் கூறியபோதுஅதற்கு க்யூ பிராஞ்ச் போலீசார் எதிர்ப்புத் தெரிவிக்க, அப்படியானால் வீட்டுக்குள் நுழைய விட மாட்டோம் என அறிவித்தனர்.
இதனால் வேறு வழி இல்லாமல் பெண் போலீசாரை வரவழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வந்த போலீசாரை மதிமுகவினர்தடுத்தனர்.
முதலில் உங்களை சோதனையிட வேண்டும். நீங்கள் ஏதாவது போலி ஆவணத்தை செட்-அப் செய்து வீட்டுக்குள் வைக்கவாய்ப்புள்ளது என்று கூற போலீசாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் இந்தச் சோதனைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தங்களை தொண்டர்கள் சோதனையிட்டுக்கொள்ளலாம் என போலீசார் அறிவித்தனர்.
இதையடுத்து ஆண் போலீசாரை மதிமுக ஆண் தொண்டர்களும், பெண் போலீஸை வைகோ வீட்டுப் பெண்களும்சோதனையிட்டனர். இதன் பின்னர் தான் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்தனர்.
போலீசை வீடியோ எடுத்த மதிமுக:
அதே போல போலீசார் இந்தச் சோதனைகளை நடத்தியபோது அதை வைகோவின் உதவியாளர் வீடியோவில் பதிவு செய்தார்.இந்த கேசட்டையும் போலீசார் கேட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
சோதனை முடிந்தபின் கைப்பற்றப்பட்ட புத்தகங்கள், சி.டி., வீடியோ கேசட்டை வைத்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேஸை காரில்இருந்து போலீசார் எடுத்துக் கொண்டு வந்தனர். அதையும் திறந்து காட்டினால் தான் உள்ளே அனுமதிப்போம் என மதிமுகவினர்கூறியதால் பெட்டியைத் திறந்து காட்டிவிட்டு எடுத்துச் சென்றனர் போலீசார்.
மொத்தத்தில் மதிமுகவினரின் முன் எச்சரிக்கை மற்றும் கழுகுப் பார்வையால் போலீசாரே திக்குமுக்காடிவிட்டனர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications