கலிங்கப்பட்டியில் வீடியோ கேசட் பறிமுதல்
கலிங்கப்பட்டி:
திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டில் க்யூபிராஞ்ச் போலீசார் சோதனை நடத்தச் சென்ற போது அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர்.
மக்களை அமைதிப்படுத்திவிட்டு சோதனை நடத்திய போலீசார் வைகோவின் வீட்டிலிருந்து வீடியோகேசட்டுகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடத்துவதற்காக இன்றுகாலை போலீசார் சென்றனர்.
அப்போது வைகோவின் வீட்டின் முன் கூடிய அக் கிராம மக்கள் வைகோவின் வீட்டை சோதிக்கக் கூடாது என்றுகூறி போலீசாரைத் தடுத்தனர்.
பின்னர் ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு மக்களிடம் எடுத்துக் கூறி அவர்களை அப்புறப்படுத்தி விட்டுபோலீசார் தங்கள் சோதனையைத் தொடர்ந்தனர்.
கலிங்கப்பட்டியில் சோதனை நடந்தபோது வீட்டில் வைகோவின் தாயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் ஆகியோர்இருந்தனர். முன்னதாக ரவிசந்திரனிடம் பேசிய போலீசார் இந்தச் சோதனைகளுக்கு முழு அளவில் ஒத்துழைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டனர்.
பின்னர் வீட்டிலிருந்து கைப்பற்ற வீடியோ கேசட்டுகளை மக்கள் முன்னிலையில் போட்டுக் காட்டிவிட்டு எடுத்துச் சென்றனர்.
முன்னதாக சோதனை நடத்த வந்த பெண் போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீசாரையும் வைகோவின் வீட்டினர் முழுச் சோதனைநடத்திவிட்டே அனுமதித்தனர்.
சோதனை நடந்தபோது வைகோவின் இந்தப் பூர்வீக வீட்டின் நூற்றுக்கணக்கான மதிமுகவினரும் பொது மக்களும்நின்று கொண்டிருந்தனனர். இதனால் பாதுகாப்புக்காக கலிங்கப்பட்டி முழுவதும் ஆயுதப் படை போலீசார்நிறுத்தப்பட்டிருந்தனர்.
சோதனைகள் குறித்து வைகோவின தாயார் நிருபர்களிடம் கூறுகையில், இந்தச் சோதனைகள் பெரும் மனக்கஷ்டத்தைத் தந்துள்ளன. ஆனால், என் மகன் ஒரு நல்ல காரியத்துக்காக சிறையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான் என்றார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications