தாயகத்தில் சோதனை: போஸ்டர்கள் தான் கிடைத்தன
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் சோதனை தொடங்கி அதே நேரத்திலேயே அக்கட்சியின்தலைமையகமான "தாயகம்" அலுவலகத்திலும் க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த அலுவலகத்தில் இருந்து வருமான வரி கட்டியதற்கான சான்றிதழ்களையும் கட்சியின் போஸ்டர்களையும்போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
விடுதலைப்புலிகள்- மதிமுக தொடர்பு உள்ளதாகக் கூறும் போலீசார் அது குறித்து ஆதாரங்களைத் தேடி இந்தசோதனைகளை நடத்தினர்.
சென்னை-அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டில் இன்று காலை 8 மணிக்கு போலீசார் சென்று அதிரடிச்சோதனையை ஆரம்பித்தனர்.
வைகோ வீட்டில் சோதனை தொடங்கிய அதே நேரத்தில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின்தலைமையகமான "தாயகக்தில்" சோதனை தொடங்கியது.
ஆனால் அவர்களை அலுவலகத்தினுள் நுழைய விடாமல் மதிமுக தொண்டர்கள் தடுத்தனர். இதையடுத்து ஆயுதப்படை போலீசார் வந்து தொண்டர்களை அப்புறப்படுத்தி விட்டு அலுவலகத்தில் நுழைந்து சோதனையைத்தொடங்கினர்.
மாலையில் இந்தச் சோதனைகள் முடிவடைந்தன. தாயகத்தில் இருந்து கடந்த 2001ம் ஆண்டு மே மாதம் நடந்தசட்டமன்றத் தேர்தலின்போது எடுக்கப்பட்ட மதிமுகவின் பிரச்சார வீடியோ, ஆடியோ கேசட்டுகள் மற்றும்சுவரொட்டிகளை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் நன்மாறன் நிருபர்களிடம் கூறுகையில்,
புலிகளுடன் எங்களைத் தொடர்புபடுத்தும் எந்தவிதமான ஆதாரமும் கிடைத்தாலும் அதை தாராளமாக எடுத்துச்செல்லலாம் என்று ஆரம்பத்திலேயே நாங்கள் கூறிவிட்டோம். ஆனால், அவர்களுக்கு எந்த ஆதாரமும்கிடைக்கவில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்கள்,பிரச்சாரம் ஆகியவை அடங்கிய ஆடியோ, வீடியோ கேட்டுகளை எடுத்துச் சென்றுள்ளது க்யூ பிராஞ்ச்.சுவரொட்டிகளையும் அள்ளிச் சென்றனர். மற்றபடி எந்தவிதமான ஆவணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதன்மூலம் இது வெறும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ரெய்ட் என்பது தெளிவாகிவிட்டது என்றார்.
இந்தச் சோதனையையொட்டி தாயகத்தைச் சுற்றி மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications