பெட்ரோல் பங்க் ஊழல்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாகக் கருதப்படும் பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம்நாயக்கும் பிரதமர் வாஜ்பாயும் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க் கட்சி எம்.பிக்கள் அமளியில்ஈடுபட்டதைத் தொடர்ந்து 5வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்ய சபா இன்று கூடியவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு போராடிய சுதந்திரப் போராட்டவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனஅஞ்சலி செலுத்தினர்.
ஆனால் அடுத்த நிமிடமே எதிர்க் கட்சிகள் கூச்சல் போட ஆரம்பித்தனர். ராம் நாயக் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்காவிட்டால் இன்று முழுவதும் சபையை ஒத்திவைக்கவேண்டியதிருக்கும் என்று ராஜ்ய சபா துணத் தலைவர் நெஜ்மா ஹெப்துல்லா எச்சரித்தார்.
ஆனால் எதிர்க் கட்சிகள் அவர் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ராம் நாயக் ராஜினாமா செய்யக்கோரி தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
நாட்டில் ஏராளமான இடங்களில் வறட்சி தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் அது குறித்து விவாதிக்க வேண்டும்.அதற்காக விவசாயத்துறை அமைச்சர் அஜித் சிங்கும் இங்கே வந்துள்ளார் என்றும் நஜ்மா கூறிப் பார்த்தார்.
அதற்கும் எதிர்க் கட்சிகள் மசியவில்லை. காங்கிரஸ் எம்.பியான ஜனார்த்தன் பூஜாரி ஒரு செய்தித் தாளைக் கையில்வைத்துக் கொண்டு ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
இதையடுத்து இன்று முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்திவைத்தார் நஜ்மா.
லோக்சபாவில்...
இதற்கிடையே பெட்ரோல் பங்க் ஊழல் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிஎம்.பிக்கள் ரகளை செய்ததால் லோக்சபாவும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது 1945ம் ஆண்டு ஆகஸ்டு 6 மற்றும் 9ம் தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமாமற்றும் நாகசாகி ஆகிய நகர்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதுவரை கடும் கோபத்துடன் அமைதியாகக் காத்துக் கொண்டிருந்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி நிகழ்ச்சிமுடிந்த மறு நிமிடமே அவையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிய அவர்கள், வாஜ்பாய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்என்றும் கூச்சலிட்டனர்.
அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பலமுறை கூறிய சபாநாயகர் மனோகர் ஜோஷி அதுபலனளிக்காமல் போகவே சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடிய பிறகும் கூட எதிர்க் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதைத்தொடர்ந்து இன்று முழுவதும் அவையை ஒத்திவைத்தார் ஜோஷி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications