போலீஸ் தான் காரணம்: ஸ்டாலின், அன்பழகன்
சென்னை:
மதுரையில் நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கிக் கொண்டிருந்த திமுகவினர் மீது போலீசார் அராஜகத்தைக்கட்டவிழ்த்து உள்ளனர் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
பசி, பட்டினியில் வாடிக் கொண்டிருக்கும் ஏழை நெசவாளர்களுக்காக திமுக ஏற்பாடு செய்திருந்த கஞ்சி வழங்கும்நிகழ்ச்சியில் அதிமுகவினருடன் போலீசாரும் சேர்ந்து கொண்டு திமுகவினரைக் காட்டுமிராண்டித்தனமாகத்தாக்கியுள்ளனர்.
இதில் பல திமுகவினரின் மண்டை உடைக்கப்பட்டதோடு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்,மதுரை மேயர் செ. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
போலீசாரே கஞ்சியை ரோட்டில் கொட்டிவிட்டு அராஜம் செய்தது கேவலமான செயல். போலீசாரின் இந்த அராஜகநடவடிக்கை ஜனநாயக உரிமைகளையே பறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
திமுக நிகழ்ச்சி நடத்தும் இடத்துக்கு மிக அருகே அதிமுகவினர் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன் என்றுகேட்டுள்ளார் அன்பழகன்.
ஸ்டாலின் பேட்டி:
மதுரையில் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அதிமுகவினரின் தாக்குதலில் இருந்து தப்பிய ஸ்டாலின் பின்னர்திண்டுக்கல்லில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு நிருபர்களிடம் பேசிய அவர்.
திமுகவின் கஞ்சி வழங்கும் திட்டத்தை அரசின் உத்தரவின்பேரில் போலீசார் தடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
திமுகவினர் பல வாரம் கேட்டு கேட்டுத் தான் கஞ்சித் திட்டத்துக்கு போலீஸ் அனுமதி தருகிறது. ஆனால், நாங்கள் நிகழ்ச்சிநடத்தும் இடத்துக்கு அருகே பிரியாணி வழங்க அதிமுகவினரை போலீசார் கடைசி நேரத்தில் அனுமதிக்கின்றனர். இதன்மூலம்வன்முறைக்கு வித்திடுவதே போலீஸ் தான்.
நான் அங்கு போயிருந்தால் நெசவாளர்களுக்கு தேவையில்லாத தொல்லை நேர்ந்திருக்கும். இதனால் தான் நான் திரும்பிவந்துவிட்டேன். என்னை அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தவில்லை. கட்சிக்காரர்கள் தான்அறிவுறுத்தினர்.
நாங்கள் தான் ஸ்டாலினைத் தடுத்து அவரைக் காப்பாற்றினோம் என்று போலீசார் கூறுவதாகக் கேள்விப்பட்டேன். பொய்சொல்வதில் போலீசுக்கு நிகர் யாரும் கிடையாது.
கலவரத்தை நடத்தியதே மதுரை கமிஷ்னர் சூர்யபிரகாஷ் தான். அவருக்கு மேலிடத்தில் இருந்து நெருக்குதல் வந்துள்ளது.இதனால் வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார் என்றார் ஸ்டாலின்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications