பெட்ரோல் பங்க் ஊழல்: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு
டெல்லி:
பெட்ரோல் பங்க் ஊழல் தொடர்பாக எதிர்க் கட்சிகள் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்க்குகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதால் பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம் நாயக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களாக எதிர்க் கட்சிஎம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதனால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.
நாளை மறுநாளுடன் (ஆகஸ்டு 14) நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவதாக இருந்தது.இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் எம்.பிக்கள் இவ்வாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் ஒன்று-தொடர்ந்து எந்தவிதமான அலுவலும் இல்லாமலே அவையை நடத்தலாம். அல்லது- காலவரையின்றி அவையைஒத்திவைக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புக்கள் தான் என்னிடம் இருந்தன என்று கூறிய லோக் சபா சபாநாயகர்மனோகர் ஜோஷி காலவரையின்றி ஒத்திவைப்பது தான் சரி என்று ஒத்திவைத்து விட்டார்.
ராஜ்யசபாவிலும் எதிர்க் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி கத்திக் கொண்டே இருந்ததால் அவையின்துணைத் தலைவரான நஜ்மா ஹெப்துல்லா அவை நடவடிக்கைகளை காலவரையின்றி ஒத்திவைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications