மதுரை போலீஸ் கமிஷனரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: கருணாநிதி
சென்னை:
மதுரையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நகரப் போலீஸ் கமிஷனர்சூர்யபிரசாத்தை தற்காலிகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக நிர்வாகக் குழு தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.
கடந்த 9ம் தேதி மதுரையில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழு கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றியது.கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
மதுரையில் நெசவாளர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிக்காக திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் தனித்தனிநாட்களில் போலீசார் அனுமதி அளித்திருக்க வேண்டும்.
ஆனால் இரு கட்சியினருக்கும் ஒரே நாளில், அதிலும் அருகருகிலேயே நிகழ்ச்சியை நடத்த சூர்யபிரசாத் அனுமதிகொடுத்தார். இதனால் தான் பிரச்சனை வெடித்தது.
எனவே சூர்யபிரசாத்தைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்து விசாரணை நடத்த தமிழக ஆளுநர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
திமுக சார்பில் கஞ்சி வழங்கிய மேடையில் புகுந்து தடியடி நடத்தி முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்ளிட்டதிமுகவினரை அடித்து உதைத்து போலீசார் மிருகத்தனமாக நடந்து கொண்டனர். மேலும் முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மதுரை மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்பட 100க்கும் அதிகமான திமுகவினரையும்போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எதிர்க் கட்சிகள் மீது இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசுஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா தூண்டுகோலாக இருப்பதையும் போலீசார்அதற்குத் துணை போவதையும் திமுக நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அதிமுகவின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டித்து முதல் கட்டமாக வரும் 19ம் தேதி அனைத்து மாவட்டத்தலைநகர்களிலும் திமுக சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்படும்.
மேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைக் கமிஷனிடமும் திமுக புகார்கொடுக்கும்.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசை மத்திய அரசு வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை.
தமிழக அரசை மத்திய அரசு எச்சரிக்கலாம். கண்டிக்கலாம். விளக்கமும் கேட்கலாம். மத்திய அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். எங்கள் தீர்மானத்தின் முக்கிய நோக்கமே அது தான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் திமுக இது குறித்து மத்திய அரசை வற்புறுத்தும்என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications