திமுகவினர் மீது தடியடி: ஆளுநரிடம் மதுரை போலீஸ் கமிஷனர் விளக்கம்
சென்னை:
மதுரையில் திமுகவினர் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடம்அந்நகரப் போலீஸ் கமிஷனர் சூர்யபிரகாஷ் விளக்கம் அளித்தார்.
கடந்த 9ம் தேதி மதுரையில் திமுக ஏற்பாடு செய்திருந்த நெசவாளர்களுக்கு கஞ்சி வழங்கும் விழா நிகழ்ச்சியின்போது அக்கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தின் போது முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், மதுரை மேயர் செ. ராமச்சந்திரன்,முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்திற்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்த திமுக சூர்யபிரகாஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவுக்காக அங்கு சென்றிருந்த ராமமோகன் ராவை சூர்யபிரகாஷ்நேரில் சென்று பார்த்து தடியடி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் நேற்று சென்னை வந்த சூர்யபிரகாஷ், தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் மற்றும் உள்துறைச்செயலாளர் நரேஷ் குப்தா ஆகியோரையும் சந்தித்து மதுரை சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications