Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. பாதுகாப்பு படையின் அட்டூழியம்: 3 பேரை அடித்து உதைத்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பட்டப்பகலில் பொதுமக்களும், போலீஸாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வயதான ஒருவரையும்,அவருடன் வந்த 2 பேரையும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் கருப்புப் பூணைப் படையைச்சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தனர்.

நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் கருப்புப் பூணைப் படையைச்சேர்ந்தவர்கள் முதல்வரை தலைமைச் செயலகத்தில் கொண்டு விட்டு விட்டு தாங்கள் தங்கியிருக்கும்சிந்தாதிரிப்பேட்டை விருந்தினர் இல்லம் நோக்கி 2 அம்பாசடர் கார்களில் வந்து கொண்டிருந்தனர்.

மிக அதிகாரம் படைத்த படையினர் என்பதால் இவர்களது கார்கள் மிக வேகமாகச் சென்றன. டிவி ஸ்டேஷன்அவர்களின் கார்கள் மிக வேகமாக வந்தன. இதனால் எதிரில் வந்த மாருதி கார் தடுமாறியது.

அந்த மாருதி கார் கருப்புப் பூன்ை படையினர் வந்த ஒரு காரின்ன் மீது லேசாக இடித்து விட்டது.

இதையடுத்து 2 கார்களையும் நிறுத்தி விட்டு கீழே இறங்கிய பூனைப் படையினர், மாருதி காரில் இருந்தவர்களைசட்டையைப் பிடித்து வெளியே இழுத்து வெளியே போட்டனர். அவர்களை சரமாரியாகத் தாக்கினர்.

அவர்களில் ஒருவர் மிக வயதானவர். அவரையும் அந்த பாதுகாப்புப் படைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஈவுஇரக்கமற்ற வகையில் அவரையும் அடித்து உதைத்தனர்.

ஏ.கே.47 துப்பாக்கியின் பின்புறத்தால் அவர்களை ஏதோ தீவிரவாதிகளைதா தாக்குவதைப் போலகண்மூடித்தனமாக அடித்தனர். இந்த கொடூர சம்பவத்தை அந்தப் பகுதியில் இருந்த போலீஸாரும், பொதுமக்களும்அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

மனசு தீர அடித்து முடித்த பின் அங்கிருந்த போலீஸாரைக் கூப்பிட்டு 3 பேரையும், அவர்களது காரையும் போலீஸ்நிலையத்திற்குக் கொண்டு செல்லுமாறு ஆணையிட்டனர்.

அம்மாவின் பாதுகாப்புப் படையினர் கூறிவிட்டதால் அவர்களை போலீசார் உடனே அள்ளிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வாய் திறக்க மறுக்கின்றனர்.

தாக்கப்பட்ட 3 பேரும் இப்போது எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

முதல்வருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது தான் இவர்களது பணி. பொது ஜனங்களை ஈவு இரக்கமற்றவகையில் இந்தப் படையினர் தாக்கியுள்ளதன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில் அரசியல்வாதிகளுக்குநாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை கருப்புப் பூனைக் கும்பல் நிரூபித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+