தியேட்டரில் பாபா ரசிகர் சாவு
பெங்களூர்:
பெங்களூரில் பாபா படம் பார்க்கச் சென்ற ரஜினி ரசிகர் கூட்ட நெரிசலில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ரஜினியின் சொந்த ஊரான பெங்களூரில் 10 தியேட்டர்களில் பாபா படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இங்கும் இஷ்டத்துக்கு விலை வைத்துடிக்கெட் விற்கப்படுகிறது. ரூ. 1,000 வரை கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரில் ரஜினியின் படத்தைப் பார்க்க தமிழர்களோடு கன்னடர்களும் போட்டி போடுவதால் தியேட்டர்களில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது.
லால்பாக் அருகே உள்ள ஊர்வசி தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற வேணுகோபால் என்ற தமிழ் ரசிகர் கூட்டத்தில் சிக்கினார். அவருக்குஅப்போது மாரடைப்பு ஏற்பட்டது. தியேட்டர் வளாகத்திலேயே அவர் இறந்தார். இவர் தையல் வேலை செய்து வரும் தினக் கூலித்தொழிலாளியாவார்.
ரசிகர்கள் ஆட்சி: ப.சி. ஜோதிடம்
இதற்கிடையே சிவகங்கையில் சுதந்திர தின விழாவில் பேசிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம்,
திராவிடக் கட்சிகள் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தக் கட்சிகளால் எந்தப் பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமான தீர்வுகாண முடியாது. 2006ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அதில் ரஜினி ரசிகர்கள் இடம் பிடிப்பார்கள் என்றார்.
பாதுகாப்புப் படைகள்:
இதற்கிடையே பாபா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தனிப் படைகளை ரஜினி ரசிகர்கள் அமைத்துவருகின்றனர்.
திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இந்தப் படையினர் தியேட்டர் நிர்வாகிகளுடன் இணைந்து டிக்கெட் கொடுபபதில் இருந்து, கூட்டத்தைக்கட்டுப்படுத்துவது, தாக்க வருபவர்களை திருப்பி அடிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், வன்னியர் பகுதிகளான வட மாவட்டங்களில் இதுவரை இந்தப் படைகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செருப்பு மாலை:
சேலத்தில் ரஜினியின் கொடும்பாவிக்கு செருப்பு மாலை போட்டு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதையில் வைத்து கொண்டு வந்துஎரித்து வருகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி, வீரபாண்டி, கீரப்பாப்பம்பட்டி ஆகிய ஊர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இது போலகொடும்பாவி- கழுதை ஊர்வலம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 50 பா.ம.கவினரை போலீசார் கைது செய்துள்ளனர்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications