போலிச் சாமியார் மோகம்: கருணாநிதி கோபம்
சென்னை:
போலிச் சாமியார்களை நம்பி மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டு இருப்பது வேதனையைத் தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சிவசக்தி என்ற சாமியாரை நம்பி ஹரியானாவைச் சேர்ந்த திருமணமான, ஒரு பணக்காரப் பெண் வந்துள்ளார். அவரைக் கட்டாயப்படுத்திக்கல்யாணம் செய்ய முயன்றுள்ளார் இந்த 70 வயதைத் தாண்டிய போலிச் சாமியார். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
விருதுநகரில் அரிசிக் கடை வைத்து நஷ்டமடைந்ததால் சென்னைக்கு வந்த சிவசக்தி என்ற அந்த நபர் பின்னர் இமயமலைக்குப் போய் சிலமாதம் இருந்துவிட்டு தன்னை சித்தர் என்று கூறிக் கொண்டு பலரை ஏமாற்றியுள்ளார்.
ஹரியாணாவில் திருமணமான பெண்ணையே மயக்கி சென்னைக்குக் கடத்தி வந்து திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
படித்தவர்களாக இருந்தாலும் கூட சாமியார் மோகம் இன்னும் நம்மை ஆட்டிப்படைப்பது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
இதுபோன்ற சாமியார்கள், வெட்ட வெட்ட வளரும் கிளையாக நடமாடிக் கொண்டிருப்பது, பகுத்தறிவு இயக்கம் இன்னும் உறுதியாகவும்,பலமாகவும், பரவலாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications