தாய்லாந்தில் தமிழர்களின் பிரச்சனைகளை பேசுவோம்: புலிகள்
கொழும்பு:
தாய்லாந்தில் அடுத்த மாதம் துவங்கவுள்ள பேச்சுவார்த்தைகளில் தமிழர் பகுதிகளில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தவிர பிற அரசியல்விவகாரங்கள் குறித்தும் பேசத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகள் நிலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரியமாற்றமாகும் இது.
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க தாய்லாந்து பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் மூன்றாவதுவாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆண்டன்பாலசிங்கத்துடன் இலங்கை அமைச்சர் மொரகொடா நடத்திய பேச்சுவார்த்தைகளில் இது முடிவு செய்யப்பட்டது.
தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் தங்கள் தலைமையில் இடைக்கால அரசை வட-கிழக்குப் பகுதியில் நிறுவுவது குறித்து மட்டுமேபேசுவோம் என புலிகள் கூறி வந்தனர். ஆனால், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும், இல்லாவிட்டால் பேச்சுவார்த்தைதொடங்க விட மாட்டேன் என இலங்கை அதிபர் சந்திரிகா கூறி வருகிறார்.
ஆனால், அவரையும மீறி பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தயாராகி வருகிறார். இந் நிலையில் நாட்டின் அரசியல்பிரச்சனைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கத் தயார் என புலிகள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் தாய்லாந்து பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழர்கள் சந்தித்து வரும் அன்றாடபிரச்சனைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பேச வேணடும் என புலிகள் கூறியுள்ளனர்.
புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் நாடு திரும்பச் செய்வது, சட்டவிரோதமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களைவிடுவிப்பது ஆகியவை குறித்து புலிகள் பேசுவர் என்று லண்டன் புலிகள் வட்டாரங்களை சுட்டிக் காட்டி சுடர் ஒலி பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications