சத்தியமூர்த்தி பவனுக்கே இடம் மாறும் காங்கிரஸ் அலுவலகம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மீண்டும் "சத்தியமூர்த்தி பவனு"க்கே இடம் பெயருகிறது.
கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிறந்தது. அப்போது,காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்த "சத்தியமூர்த்தி பவன்" உள்ளிட்ட காங்கிரஸ் சொத்துக்களைதமாகாவின் தலைவரான மூப்பனார் கைப்பற்றிக் கொண்டார். அதற்குப் பிறகு அவற்றைத் திரும்ப காங்கிரஸிடம்ஒப்படைக்கவில்லை.
இப்போது காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைந்து விட்டது. ஒரே காங்கிரஸ் தான் இப்போது தமிழகத்தில் உள்ளது.எனவே எப்போது "சத்தியமூர்த்தி பவனு"க்கு காங்கிரஸ் தலைமையகம் இடம் மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம்கூறுகையில்,
"சத்தியமூர்த்தி பவனு"க்கு விரைவில் காங்கிரஸ் அலுவலகம் இடம் மாறி விடும்.
தற்போது அங்கு சில பராமப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அவை முடிந்தவுடன் அங்கு சென்று விடுவோம்என்றார் இளங்கோவன்.
"சத்தியமூர்த்தி பவன்" தவிர, "காமராஜ் பவன்", "காமராஜர் அரங்கம்" உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களும் தமாகாவசம் இருந்தன. இப்போது அவை அனைத்தும் காங்கிரஸ் வசம் மீண்டும் வரப் போகின்றன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications