தேர்தல் கமிஷன்- பா.ஜ.க. மோதல் முற்றுகிறது
டெல்லி:
குஜராத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது தொடர்பாக ஜனாதிபதி கலாம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத்தில் இன்னும் சகஜநிலை திரும்பவில்லை என்று கூறி அங்கு தேர்தல் நடத்த கமிஷன் மறுத்துவிட்டது. அங்கு கடந்த ஏப்ரல்மாதக் கடைசியில் சட்டமன்றம் கூடியது. பின்னர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதாக பா.ஜ.க.அறிவித்தது.
இரு சட்டமன்றக் கூட்டங்ளுக்கான இடைவெளி 6 மாதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று அரசியல் சட்டத்தில்கூறப்பட்டிருப்பதால் தேர்தல் கமிஷன் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்கும் என பா.ஜ.க. எதிர்பார்த்தது. ஆனால், அங்குநிலைமையை ஆராய்ந்த தேர்தல் கமிஷன் தேர்தல் தேர்தலை இப்போதைக்கு நடத்த முடியாது என்று அறிவித்துவிட்டது.
அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. மதக் கலவரத்தில் பெரும்விமர்சனத்துக்கு உள்ளான முதல்வர் நரேந்திர மோடி தலைமயிலான தங்களது ஆட்சியிலேயே தேர்தலை சந்தித்துவிடலாம் என்றபா.ஜ.கவின் திட்டத்தை தேர்தல் கமிஷன் தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து தேர்தல் கமிஷனுக்கு எதிராக பா.ஜ.க. கடும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. தேர்தல் கமிஷன் தனதுவரம்புகளை மீறிவிட்டதாக துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார். ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கச் சொல்ல கமிஷனுக்குஅதிகாரம் இல்லை என்றார்.
நேற்று இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை கலந்து ஆலோசித்தது. அதில் தேர்தல் கமிஷனின் செயல் குறித்து உச்சநீதிமன்றத்தில் புகார் தரவும் ஜனாதிபதியிடம் புகார் தரவும் முடிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதே நேரத்தில் ஜனாதிபதி கலாமின் கருத்தை அறியவும் திட்டமிடப்பட்டது. கலாமிடம்இது தொடர்பான புகார் கடிதத்தையும் மத்திய அரசு அளித்துவிட்டது.
விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க மத்திய அரசு மறுத்தால் அரசியல் சட்டரீதியில் சிக்கல்கள் வரவும் வாய்ப்புஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications