"அதிமுக காட்டாட்சியை கூட்டாக எதிர்ப்போம்": மதிமுக
சென்னை:
எதேச்சாதிகார அதிமுகவின் காட்டாட்சியை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களும் ஒன்று திரண்டுபோராட்டம் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரும் மதிமுக தலைவருமான கண்ணப்பன் கூறினார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பிரமுகர்களைச்சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கண்ணப்பன் பேசுகையில்,
எதேச்சதிகார அதிமுகவின் காட்டாட்சியில் திமுக, மதிமுக மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தஎதிர்க்கட்சிகளே பாதிக்கப்பட்டுள்ளன.
அதிமுக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டும். அப்படி ஒருபோராட்டத்தை ஆளும் அதிமுக சந்திக்க வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
எதிர்க் கட்சிகள் மட்டுமில்லாமல் மக்களும் அதிமுகவுக்கு எதிராக அணி திரண்டால் தான் மக்கள் விரோத, அராஜகஅதிமுக ஆட்சி அகலும்.
எனது வீட்டில் அத்துமீறி காவல்துறையினர் சோதனை நிடத்தியது குறித்து புகார் கொடுத்துள்ளேன் என்றார்கண்ணப்பன்.
மதுரை-செல்லூரில் நெசவாளர்களுக்குக் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்ட முன்னாள்சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மதுரை மேயர் செ. ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினரையும் சிறையில்சந்தித்தார் கண்ணப்பன்.
பின்னர் செல்லூர் சம்பவத்தின் போது போலீசார் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணனையும் கண்ணப்பன் சென்று பார்த்தார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மின் விசிறி கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கண்ணப்பன்,உண்மையிலேயே சிறை விதிகளின் படி மின் விசிறி வழங்க முடியும் என்றால் அதை வைகோ ஆட்சேபிக்கமாட்டார் என்றும் கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications