ஜெயாவின் டான்சி ஊழல்: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை இன்று நடக்கிறது. இந்த விசாரணை நேற்று நடப்பதாகஇருந்தது.
ஆனால், நேரமின்மை காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டு இன்று பிற்பகலில் விசாரணை துவங்குகிறது.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அளித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் சிறைத் தண்டனைவழங்கப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டிபோட முடியவில்லை.
இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அவர்களுடைய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி டான்சிவழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி இறுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றஜெயலலிதா, மார்ச் 2ம் தேதி மீண்டும் தமிழக முதல்வரானார்.
இதற்கிடையே டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திமுக வழக்கறிஞரானஆலந்தூர் பாரதி மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி வெங்கடராம ரெட்டி ஆகியோர் அடங்கியபெஞ்ச் விசாரித்து வருகிறது.
இறுதி கட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications