அதி பயங்கர திருவிழா
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் குழந்தைகளையும் வயதுக்கு வராதசிறுமிகளையும் உயிருடன் மண்ணில் புதைத்து சில நிமிடங்களுக்குப் பிறகு மீட்கும் அதி பயங்கரமான கோவில்விழா நடந்தது.
ந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைராஜும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வயதுக்கு வராத சிறுமிகள் சீக்கிரம் வயதுக்கு வர வேண்டும்என்று வேண்டியும் குழந்தைகளின் நோய் தீரவும் முத்துக்காளி அம்மன் மற்றும் காளியம்மனுக்கு நேர்த்திக் கடன்செய்கிறார்கள்.
நேற்று (புதன்கிழமை) நடந்த இந்தக் கோவில் விழாவின்போது வயதுக்கு வராத சிறுமிகளை உயிருடன்மண்ணுக்குள் புதைத்து, மேலே மண்ணைப் போட்டு மூடினர். பின்னர் சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும்அவர்களை வெளியே எடுத்தனர்.
அதிபயங்கரமான இந்த நிகழ்ச்சியில் 105 சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தக் கோவில் விழாவின் சிறப்புஅழைப்பாளராக அமைச்சர் துரைராஜ் அழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் குழந்தைகள், சிறுமிகளை மண்ணுக்குள் புதைக்கும்போது அவர் அங்கு இல்லை.
குழி மாற்றுத் திருவிழா என்று இது அழைக்கப்படுகிறது. இந்த விழாவில் பேரையூர் மற்றும் சுற்றுக் கிராமத்தினர்கலந்து கொள்கின்றனர். வயதுக்கு வராத சிறுமிகள் உள்ள வீட்டினர் கட்டாயம் இதில் கலந்துகொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமாம்.
குழிக்குள் இறக்கி விடப்படும் சிறுமிகளின் மீது திருநீறு பூசுகிறார்கள். பிறகு மஞ்சள் துணியை உடலைச் சுற்றிலும்கட்டுகிறார்கள். பின்னர் கோவிலுக்கு முன்பு தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தாய்மாமன்கள் தலைமையில் சிறுமிகள் ஊர்வலமாக கூட்டி வரப்படுகிறார்கள். வீட்டிலிருந்தே மண் வெட்டிகளுடன்ஊர்வலமாக வருகின்றனர்.
கோவிலை அடைந்தவுடன் பள்ளம் தோண்டப்படுகிறது. அதன் பிறகு பூசாரிகளின் முழக்கங்களுக்கு மத்தியில்சிறுமி அல்லது குழந்தை குழியில் வைத்துப் புதைக்கப்படுகிறார்கள்.
பின்னர் புதைத்த இடத்தில் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி பூஜை நடத்துகிறார்கள். சரியாக ஒரு நிமிடத்திற்குப்பிறகு குழியைத் திறக்கலாம் என்று பூசாரி உத்தரவிட்டவுடன் வேகம் வேகமாக குழி தோண்டப்படுகிறது. உள்ளேஉள்ள குழந்தை அல்லது சிறுமி வெளியே எடுக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அந்தக் குழந்தைக்கும் சூடம் காட்டிபூஜை செய்கிறார்கள்.
இந்த விநோத திருவிழா 400 ஆண்டுகளாக இப்பகுதியில் நடந்து வருகிறதாம். ஆனால் இதுவரை எந்தசிறுமிக்கும், குழந்தைக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்கிறார்கள்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட சிறுமிகள் விரைவிலேயே பூப்பெய்தி விடுவார்கள் என்று கிராமத்தினர்நம்புகின்றனர்.
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு விநோதமா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications