ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் அறிவுரை
திருச்சி:
சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள ஒரே காரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதா, நீதித்துறை உள்பட யாரையும் மதிக்காமல் மிகஅலட்சியமாக நடந்து வருகிறார். இது நல்லதல்ல என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
மிக முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் அரசுகள் கலந்து ஆலோசிப்பது வழக்கம். ஜனநாயகத்தில் அதுமிகவும் அவசியமானதும் கூட. ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி வருகின்றன.
நீதிமன்றங்களின் கட்டணத்தை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்துடனும்,வழக்கறிஞர்களுடனும் கலந்து பேசியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த கட்டண உயர்வு தொடர்பான உத்தரவை மிக ரகசியமாகத் தயாரித்து, அதை 13, 14 நாட்கள் மிக ரகசியமாக வைத்திருந்துவெளியிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட இது தெரிவிக்கப்படவில்லை.
இதன்மூலம் நீதித்துறையை அரசு அலட்சியப்படுத்திவிட்டது. இது மிகவும் கண்டனத்திற்குறியது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டம் நியாயமானது.
அதே போலத்தான் அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்ளுடன் இணைப்பதிலும் அரசு யாருடனும் கலந்து பேசாமல் தன்னிச்சையாகமுடிவெடுத்துள்ளது.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைத்துவிட்டுவிடுவதன் மூலம் உயர் கல்விக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்னும் ரீதியில் தமிழக அரசு நடந்து கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications