தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கிடையாது: கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாத நிலையில் இருக்கிறோம் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில்கூறப் போவதாக கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவிரி கண்காணிப்புக் குழு கடந்த 9ம் தேதி கூடி, பின்னர் தமிழக மற்றும் கர்நாடககாவிரி நீர்பிடிப்பு அணைகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் பிறகு காவிரி ஆணையத்திற்கு இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் கண்காணிப்புக் குழு அனுப்பியது.
இதையடுத்து வரும் 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காவிரி ஆணையம் கூடுகிறது. பிரதமர் வாஜ்பாய்தலைமையில் நடக்கும் இந்த ஆணையக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக, கேரள மற்றும் பாண்டிச்சேரி முதல்வர்கள்கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்றுகாலை அம்மாநில முதல்வர் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.
மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக் கூடாது என்று கர்நாடக அரசிடம் பிடிவாதத்துடன் கூறி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாககிருஷ்ணாவுக்கு எந்தவிதமான நெருக்கடியையும் அளிக்க மாட்டோம் என்றும் அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
கூட்டத்திற்குப் பின்னர் கிருஷ்ணாவிடம் நிருபர்கள் இவ்விவகாரம் குறித்து கேட்ட போது இப்போதைக்கு எதையும்நான் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார். காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலை குறித்துதெளிவாக எடுத்துக் கூறுவேன் என்றும் அவர் கூறினார்.
அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் கூட கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மிகவும் மோசமாகஇருப்பதாலும் தற்போது மாநிலத்தின் ஏராளமான பகுதிகளில் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதாலும்தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாத நிலையில் தான் இருப்பதாகப் பிரதமரிடம் கர்நாடக அரசு கூறவுள்ளதாகத்தெரிகிறது.
கர்நாடக அரசு எதைக் கூறினாலும் அது குறித்து வாஜ்பாய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்துத்தெரியவில்லை.
ஆனாலும் காவிரி ஆணையத்தின் தலைவர் என்கிற முறையில் வாஜ்பாய் அனுப்பும் அறிக்கையைப் பொறுத்தேஉச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடகம் நீர் திறந்தே தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால்கர்நாடகம் மிகவும் மோசமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும் என்று அம்மாநில பாஜக கூறியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications