கர்நாடக மாஜி அமைச்சர், போலீஸ்காரரை கடத்தினான் வீரப்பன்
பெங்களூர்:
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் ஜனதா தளத் தலைவர்களில் ஒருவருமான எச். நாகப்பாவை சந்தன வீரப்பன் கடத்திச் சென்றான்.அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரரையும் வீரப்பன் கடத்தினான்.
நேற்று இரவு 10.30 மணியளவில் மைசூர் அருகே உள்ள சாம்ராஜ்பேட்டை- கொள்ளேகால் காட்டுப் பகுதியில் உள்ள அவரது பண்ணைவீட்டில் இருந்து அவரைத் தூக்கிச் சென்றான் வீரப்பன்.
வீரப்பனின் நடமாட்டம் நிறைந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் காமகரே என்ற கிராமத்தில்நாகப்பாவுக்கு பண்ணை வீடு உள்ளது. இங்கு தனது பேரனுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்காக மனைவி பரிமளா மற்றும் குடும்பத்துடன்வந்திருந்தார் நாகப்பா.
முகமூடியுடன் வந்த வீரப்பன்:
இரவில் அனைவரும் தூங்க ஆரம்பித்த நிலையில் 8 பேர் கொண்ட வீரப்பனின் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் அனைவரும் முகமூடிஅணிந்திருந்தனர்.
வீரப்பனும் கும்பலும் வீட்டுக் கதவைத் தட்டினர். அப்போது நாகப்பாவின் பாதுகாப்புக்கு இருந்த இரு போலீஸ்காரர்களும் வெளியேஎட்டிப் பார்த்தனர். முகமூடிக் கும்பலைப் பார்த்தவுடன் அவர்கள் கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.
போலீசுடன் துப்பாக்கி சண்டை:
ஆனால், வீரப்பனுன் அவனது ஆட்களும் வீட்டின் கதவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் கதவு தூள் தூளானது. இதையடுத்துபோலீஸ்காரர்களும் வீரப்பன் கும்பலை நோக்கி சுட்டனர். ஆனால், 8 பேர் துப்பாக்கிகளுடன் சுட ஆரம்பித்ததால் 2 போலீஸ்காரக்களால்சமாளிக்க முடியவில்லை.
பின்னர் உள்ளே நுழைந்த வீரப்பன் முதலில் போலீஸ்காரர்களைத் தாக்கினான். போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடுவதற்குமுன் இருவரையும் வீரப்பனின் ஆட்கள் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துவிட்டனர்.
பின்னர் நாகப்பாவை உடன் வருமாறு வீரப்பன் அழைத்தான்.
ஆனால், நாகப்பா உடன் செல்ல மறுத்தார். அவரது மனைவி வீரப்பனின் காலில் விழுந்து விட்டுவிடுமாறு கெஞ்சினார்.
கயிற்றால் கட்டி...
ஆனால், பரிமளாவை எட்டி உதைத்த வீரப்பன், நாகப்பாவை தனது ஆட்களைக் கொண்டு கயிற்றால் கட்டினான். பின்னர் ஒருபோலீஸ்காரரையும் கையைக் கட்டினான். நாகப்பா தொடர்ந்து முரண்டு பிடிக்கவே அவரை தூக்கிகுண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றதுவீரப்பன் கும்பல். அவர் அப்போது செருப்பு கூட அணியவில்லை. போலீஸ்காரரையும் துப்பாக்கி முனையில் வீரப்பன் கடத்திச் சென்றான்.
பஸ்சில் ஏற்றி...
பின்னர் அந்த வழியே சென்ற பேருந்தை நிறுத்தி அதில் நாகப்பாவையும் போலீஸ்காரரையும் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் சிறிது தூரம்சென்றவுடன் பஸ்சில் இருந்து இருவரையும் இறக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
வீரப்பனின் இந்த முட்டாள் தனத்தால் கர்நாடகத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இடையே பீதி பரவி வருகிறது.கடந்த ஜே.எச். படேலின் ஜனதா தள அரசில் விவசாயப் பொருள்கள் விற்பனைத்துறை அமைச்சராக இருந்தவர் நாகப்பா என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications