நெடுமாறனை விடுவிக்க வீரப்பன் கோரவில்லை: கிருஷ்ணா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாகப்பாவை விடுவிக்க பழ.நெடுமாறனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வீரப்பன் வைக்கவில்லை என கர்நாடக முதல்வர்கிருஷ்ணா கூறினார்.

காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை டெல்லி வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம்கூறியதாவது:

ராஜ்குமாரை விடுவித்தபோது வைத்த அதே கோரிக்கைகளைத் தான் மீண்டும் வீரப்பன் கேட்டுள்ளான். அவன் அனுப்பிய கேசட் 55விநாடிகள் தான் ஓடுகிறது. அதில் என்னை கர்நாடக அரசு ஏமாற்றிவிட்டது என்று தான் திரும்பத் திரும்ப கூறியுள்ளான்.

நெடுமாறனை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் எல்லாம் அவன் வைக்கவில்லை. அதே போல பணமும் கேட்கவில்லை. புதியகோரிக்கைகள் ஏதும் இல்லை. அதிக அளவில் அதில் வீரப்பன் பேசவில்லை. ராஜ்குமாரை விடுவித்தபோது எனக்கு தந்த உறுதிமொழிகளைநிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டீர்கள் என்று தான் கூறியிருக்கிறான்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் இன்று மாலை பேசுவேன். அந்த கேசட்டையும் எடுத்து வந்துள்ளேன். அதை தமிழக முதல்வரிடம்கொடுப்பேன்.

நாகப்பாவின் கடத்தல் விவகாரத்துக்கு கர்நாடகம் தான் காரணம் என்று ஜெயலலிதா ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. எனக்குஅவரை நன்றாகத் தெரியும். அவரையும் எனக்குத் தெரியும். இதில் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்ள ஏதும் இல்லை என்றார் கிருஷ்ணா.

ரஜினியை காட்டுக்கு அனுப்பி நாகப்பாவை மீட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே என்றுகேட்டரோது. நான் ராமதாசுடனும் பேசுவேன். அவரால் ஏதாவது உதவ முடியும் என்றால் நிச்சயம் அவரது உதவியையும் கேட்டுப்பெறுவேன் என்றார் கிருஷ்ணா.

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நதி நீர் ஆணையத்தின் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் டெல்லி தமிழ்நாடுஇல்லத்துக்குச் செல்லும் கிருஷ்ணா அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்து பேசுகிறார்.

ராஜ்குமாரை விடுவித்தபோது வீரப்பன் வைத்த முக்கிய நிபந்தனைகள்:

பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.

தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்குஉறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது. நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

இவை தான் அவனது முக்கிய கோரிக்கைகள். அவற்றைத் தான் இப்போதும் வீரப்பன் கூறியுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+